காஷ்மீரில் 11 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்:

காஷ்மீரில் ராணுவம் நடத்திய தாக்குதல்களில் 5 பாகிஸ்தானிய ஊடுறுவல்காரர்கள்உள்பட 11 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

மேலும் சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்று தக்க சமயத்தில் செயலிழக்கச்செய்யப்பட்டதால் மிக்கப் பெரிய சேதம் தவிர்க்கப்பட்டது என்று பாதுகாப்புத் துறைஅதிகாரிகள் தெரிவித்தனர்.

சனிக்கிழமை அதிகாலை பாரமுலா மாவட்டம், பாஜ்வானி காட்டுப் பகுதி வழியாக 5தீவிரவாதிகள் இந்திய எல்லைக்குள் நுழைந்ததை கண்ட ராணுவ வீரர்கள் அவர்களைநோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். தீவிரவாதிகளும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்தசண்டை பல மணி நேரம் தொடர்ந்தது. இறுதியில் தீவிரவாதிகள் கொல்ப்பட்டனர்.

தீவிரவாதிகளிடமிருந்து ஏ.கே.-47 ரக இயந்திர துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன.

மற்றொரு சம்பவத்தில் 1 பாகிஸ்தான் தீவிரவாதி உள்ளிட்ட 3 தீவிரவாதிகள் ஸ்ரீநகர்-குல்மார்க் சாலையில் கொல்லப்பட்டனர்.

ஸ்ரீநகர் -கார்கில் சாலையில் 2 அடையாளம் தெரியாத தீவிரவாதிகள்கொல்லப்பட்டனர். கூப்வாரா பகுதியிலும் 1 தீவிரவாதி பாதுகாப்பு படையினரால்சுட்டுக் கொல்ப்பட்டான்.

கண்ணி வெடி:

ஸ்ரீநகர் -பாரமுலா தேசிய நெடுஞ்சாலையில் எல்லை பாதுகாப்பு படையினர் சக்திவாய்ந்த கண்ணி வெடி ஒன்றை கண்டு பிடித்தனர்.


உடனடியாக வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுவெடிகுண்டு செயலிழக்கச் செய்யப்பட்டது.

இந்த வெடிகுண்டு 10 கிலோ எடை கொண்டது. இந்த வெடிகுண்டு தக்க சமயத்தில்கண்டு பிடிக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டதால் பெருத்த சேதம்தவிர்க்கப்பட்டது என்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற