தமிழகம் முழுவதும் 19 "சிமி" உறுப்பினர்கள் கைது

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரை:

மதுரையில் மேலும் ஒரு "சிமி" உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் தமிழகத்தில் கைதுசெய்யப்பட்ட இந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்தஇயக்கங்களின் அலுவலகங்களுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

தீவிரவாத செயல்களில் ஈடுபட்டுவருவதாகக் கூறி "சிமி" என்ற இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கத்துக்கு மத்தியஅரசு 2 ஆண்டுகள் தடைவிதித்தது.

இதையடுத்து இந்தியா முழுவதும் உள்ள "சிமி" உறுப்பினர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைதுசெய்யப்பட்டு வருகின்றனர்.

சென்னை, மதுரை, கோவை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இந்த இயக்கத்தின் உறுப்பினர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மதுரையில் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) இரவு 3 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னையில் இந்தஇயக்கத்தின் நிர்வாகிகள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

தற்போது அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் மதுரையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.அவர் பெயர் அபுதாஹிர். இவர் சிமி இயக்க நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுவந்ததாகக் கூறப்படுகிறது.

தமிழகத்தில் கரூர், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, பள்ளபட்டி ஆகிய ஊர்வகளிலும் சிமி அமைப்புக்குஅலுவலகங்கள் உள்ளன.

சென்னையில் உள்ள சிமி அமைப்பின் மாநில தலைமை அலுவலகம் வெள்ளிக்கிழமை மூடப்பட்டு போலீசாரால் சீல்வைக்கப்பட்டது. சென்னை மண்டல சிமி செயலாளரான ஷகீர் அசிம் (28), பொருளாளர் காதர்பாபு (29)ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இதில் ஷகீர் பள்ளபட்டியைச் சேர்ந்தவர். காதர் பாபு கல்லூரியில்பேராசிரியராக பணிபுரிகிறார்.

இவர்கள் தவிர செந்தில்குமார் என்ற முகம்மது இலியாஸ் (27), ஜவஹர் அலி (25) ஆகியோரும் கைதுசெய்யப்பட்டனர். இதில் செந்தில்குமார் கேரள முஸ்லீம் பெண்ணை திருமணம் செய்து கொண்டு முஸ்லீம் மதத்துக்குமாறியவர்.

கைது செய்யப்பட்ட சிமி இயக்கத்தினர் அனைவரும் நன்கு படித்த இளைஞர்கள். இவர்கள் இஸ்லாமிய மதம்குறித்த புத்தகங்களை வெளியிட்டு வந்தனர். இதுவரை தீவிரவாத செயல்கள் எதிலும் ஈடுபட்டதாக இவர்கள் மீதுபுகார்கள் இல்லை. ஆனாலும், இந்த அமைப்பின் உயர் தலைவர்களுக்கு ஒசாமா பின் லேடனின் அல்-காய்தாஇயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் சந்தேகப்படுகிறது.

பின்லேடனுடன் தாங்கள் சார்ந்திருக்கும் இயக்கத்துக்கு தொடர்புள்ளது என்ற விவரம் இந்த இயக்கத்தில் உள்ள பலஅப்பாவி இளைஞர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. ஆனால், இந்த இயக்கத்தில் நிர்வாக அளவில்இருக்கும் அனைவருக்கும் இயக்கத்தின் மறைமுகமான நடவடிக்கைகள் குறித்துத் தெரிந்திருக்க வேண்டும் என்றுகருதப்படுகிறது.

சென்னை, மதுரை தவிர கரூர், திருச்சி, வேலூர், நெல்லை ஆகிய நகர்களிலும் இந்த இயக்கத்தைச் சேர்ந்த பலர்கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் கைதானவர்களின் எண்ணிக்கை 19 ஆகியுள்ளது.

செய்தித் தொடர்பாளர் பேட்டி:

இதற்கிடையில் சிமி இயக்கத்தின் செய்தித் தொடர்பாளர் மஜீத் நிருபர்களிடம் கூறுகையில்,

சிமி அமைப்புக்கு தடை விதித்தது, மத்திய அரசின் தன்னிச்சையான முடிவு அல்ல.

இஸ்லாமிய இயக்கங்கங்களைச் சமாளிக்க முடியாமல் சங்பரிவார் போன்ற இந்து அமைப்புகள் மத்திய அரசைத்தூண்டிவருகின்றன. இவர்களின் பயந்தாங்கொள்ளித் தனத்தின் வெளிப்பாடுதான், இந்தத் தடை.

தீவிரவாதத்தைப் பற்றி யாருக்கு பேச உரிமையில்லையோ, அவர்கள்தான் இங்கு ஆட்சி செய்துவருகிறார்கள்.

மேலும் எங்கள் இயக்கத்திற்குத் தான் அவர்கள் தடைவிதிக்க முடியும். எங்கள் கருத்துக்களுக்கு யாராலும்தடைபோட முடியாது.

முஸ்லீம் சமுதாயத்தை மறுமலர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்ல முயன்ற எங்கள் இயக்கத்துக்கு தடைசெய்யப்பட்டதற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற