3 வீரப்பன் கூட்டாளிகள் கைது

Posted By:
Subscribe to Oneindia Tamil

சத்தியமங்கலம்:

சத்தியமங்கலம் அருகே கொள்ளையில் ஈடுபட்ட வீரப்பன் கூட்டாளிகள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடந்த ஆண்டு கானகுந்தூர் என்ற கிராமத்தில் உள்ள சுப்ரமணியம் என்ற விவசாயியின் வீட்டில் வீரப்பன்கொள்ளையில் ஈடுபட்டான். வீட்டுக்குள் புகுந்து வீட்டிலுள்ளவர்களைக் கட்டிப்போட்டுவிட்டு , நகை மற்றும்பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றான்.

அந்தக் கொள்ளையில் வீரப்பனுடன் அவனது கூட்டாளிகள் சிலரும் ஈடுபட்டனர். இதுகுறித்து கடம்பூர் போலீசார்வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையில் வீரப்பனுடன் காட்டில் திரியும் தமிழ்ப் போராளிக் குழுவைச் சேர்ந்த செல்வம் என்ற சத்யாபோலீசில் பிடிபட்டான்.

அவன் கொடுத்த தகவலின் பேரில் சிக்கரசம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ராமன், அவரது மகன் பெரியசாமி,மற்றும் பொம்மன் என்ற 3 பேரும் அந்தக் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் என்பது தெரியவந்தது.

இதையடுத்து பங்களாப் புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணசாமி தலைமையில் ஒரு போலீஸ் படை விரைந்துசென்று, அந்த 3 பேரையும் கைது செய்தது.

கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் வீரப்பனைப் பற்றியும், அவனது மற்ற கூட்டாளிகள் பற்றியும் போலீசார்துருவித்துருவி விசாரணை செய்துவருகிறார்கள்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற