உள்ளாட்சித் தேர்தல்: ஜெ.யின் தேர்தல் வியூகம் தயார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

உள்ளாட்சித் தேர்தலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முழு மூச்சாக பிரசாரத்தில் ஈடுபடவிருக்கிறார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் கருணாநிதிதான் என்னை தேர்தலில் நிற்க விடாமல் செய்துவிட்டார் என்று கூறி மக்கள்மத்தியில் அனுதாபத்தைப் பெற்றார்.

இந்த முறையும் தான் முதல்வர் பதவி இழந்ததற்கு, பிரதமர் வாஜ்பாய், முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் மாறன்போன்றவர்கள்தான் காரணம் என்று கூறி மக்களிடம் அனுதாபத்தைச் சம்பாதிக்க அவர் திட்டமிட்டிருப்பதாகக்கூறப்படுகிறது.

இதற்காக தனது ஆஸ்தான தளபதி செங்கோட்டையனிடம் பிரச்சாரத்திற்கதான திட்டம் வகுக்கவும், தான் செல்லும்வழியெங்கும் கூட்டம் கூட்ட ஏற்பாடுகள் செய்யவும் உத்தரவிட்டுள்ளாராம். இதையடுத்து செங்கோட்டையன்,அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்களுக்கு ஒரு உத்தரவிட்டிருக்கிறார்.

அந்த உத்தரவில், ஜெயலலிதாவின் வருகையின்போது கூட்டம் கூட்ட முடியாத அமைச்சர்கள் மற்றும்எம்.எல்.ஏக்கள் தனியாக "கவனிக்க"ப்படுவார்கள். எனவே அனைவரும் இதில் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும்என்று கூறியிருக்கிறார்.

மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிமுகவின் வெற்றி அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்களைச்சார்ந்தது என்றும் கூறப்பட்டிருக்கிறது.

எனவே கணிசமான வெற்றியைக் கொடுத்தால் ஒழிய தங்கள் பதவிக்கு உத்திரவாதம் இல்லை என்பதை உணர்ந்துஅனைத்து அமைச்சர்களும் ஓடியாடி உழைக்க ஆரம்பித்து விட்டனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற