காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை (கா.ஜ.பே.) சார்பில் நகராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியலை பேரவைபொதுச்செயலாளர் ப.சிதம்பரம் சனிக்கிழமை இரவு வெளியிட்டார்.

காங்கிரஸ் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள 3 - வது அணியில் ப.சிதம்பரம் கட்சியான கா.ஜ.பே. இடம் பெற்றுள்ளது.

இந்த அணியில் உள்ள கட்சிகளிடையே இடப்பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் அணியில் இருந்து தங்கள் கட்சிக்குஒதுக்கப்பட்ட நகராட்சிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை சிதம்பரம் அறிவித்தார்.

போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம் வருமாறு:

செங்கல்பட்டு-சந்திரசேகரன், சிதம்பரம்-ஆர்.பாண்டியன், செய்யாறு-யசோதா, புதுக்கோட்டை-தமிழ்ச்செல்வன், பரமக்குடி-ராமசாமி,மணப்பாறை-கடவுள் ஆறுமுகம், உடுமலைப்பேட்டை-சிவக்கனி சுபாஷ், போடி-எம்.பரமராஜ், மேட்டூர்-டாக்டர் சந்திரமோகன்,நாமக்கல்-சீனிவாசன், கிருஷ்ணகிரி-கே.ரமேஷ் அர்னால்டு .

அடுத்த பட்டியல் ஞாயிற்றுக்கிழமை மாலை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற