புலிகள் தளபதி கொலை: பதில் தாக்குதலுக்கு தயார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

புலிகள் தளபதி பிரபாகரனுக்கு நெருக்கமானவரும், புலிகளின் விமானப் படைப் பிரிவின் தளபதியாகஇருந்தவருமான சங்கர் கொல்லப்பட்டதையடுத்து, இலங்கை ராணுவத்தினர் மீது புலிகள் பதில் தாக்குதல் நடத்ததிட்டமிட்டுள்ளனர்.

வைத்தியலிங்கம் சோமலிங்கம் என்ற சங்கர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கன்னிவெடி விபத்தில்கொல்லப்பட்டார்.

அவர் பிரபாகரனின் உறவினர் என்பதைத் தவிர, விடுதலைப்புலிகளின் பல்வேறு படைப்பிரிவுகளிலும் சிறப்பாகப்பணியாற்றியவர். மேலும் அந்த இயக்கத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருந்தவர். இதனால்பிரபாகரனுக்கு அவர் மீது அபார நம்பிக்கையாம்.

இந்நிலைையில் வன்னி என்ற காட்டுப்பகுதியில் சங்கர் மற்றும் சிலர் ஜீப்பில் சென்று கொண்டிருக்கும் போது, ஒருகன்னிவெடி வெடித்ததில் சங்கர் பலியானார். மற்றவர்கள் தப்பிவிட்டனர்.

புலிகள் தரப்பில் இவர் கொலைக்கு காரணம் இலங்கை ராணுவத்தினர்தான் என்று கூறப்படுகிறது. ஆனால்இலங்கை ராணுவத்தினர் இதை திட்டவட்டமாக மறுக்கின்றனர்.

இந்நிலையில் இலங்கை ராணுவத்தின் மீது புலிகள் பதில் தாக்குதலுக்கு தயாராகி வருவதாகக் கூறக்பபடுகிறது.மேலும் புலிகள் ஆட்சி செய்யும் பகுதியில் பிரபாகரன், எமர்ஜென்சியை அறிவித்துள்ளாராம்.

இந்தத் தாக்குதல் நடத்தும் முன்பு இலங்கை ராணுவத்தினரால் புலிகளுக்கு ஏற்படும் ஆபத்துக்களைத் தவிர்க்க.பிரபாகரன் தனது தளபதிகளில் ஒருவரான பால்ராஜ் என்பவரை நியமித்துள்ளார்.

பால்ராஜ் புலிகள் ஆட்சி செய்யும் பகுதியில் இலங்கை ராணுவத்தினர் ஊடுவாமல் தடுக்க நடவடிக்கை எடுத்துவருகிறாராம்.

மேலும் இதற்கு முன்பு கன்னிவெடியில் சிக்கி பலியான புலிகளின் கடற்படைத் துணைத் தளபதி கங்கை அமரன்,அம்பாரா பகுதியின் அரசியல் பிரிவுத் தலைவர் நிஜாம், மற்றும் கிழக்குப் பகுதியின் தொலைத்தொடர்புத் துறைத்தலைவர் மனோ ஆகியோர் கொல்லப்பட்டதற்கும், இலங்கை ராணுவத்தினர் தான் காரணம் என்று புலிகள் தரப்புகூறுகிறது.

தற்போதுள்ள சூழ்நிலையில் இன்னும் ஓரிரு நாட்களில் புலிகள் தரப்பில் பயங்கரமான தாக்குதல் நடத்தப்படுவதுஉறுதியாகி உள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற