நியூயார்க்கில் பன்னாட்டு தமிழ் சங்கம் கட்டும் பிரம்மாண்ட கட்டடம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

நியூயார்க் நகரில், தமிழர்களுக்காக நவீன வசதி கொண்ட கட்டிடம் ஒன்றை கட்டசர்வதேச தமிழ்ச்சங்கம் (பன்னாட்டுத் தமிழ் நடுவம்) அமைக்கவிருப்பதாக இந்தஅமைப்பின் நிறுவனர் வின்ஸ்டன் வி. பஞ்சாட்சரம் தெரிவித்துள்ளார்.

உலகில் உள்ள அனைத்து தமிழர்களையும் ஒன்றுபடுத்தும் நோக்கத்துடன் பன்னாட்டுதமிழ் நடுவம் அமைக்கப்பட்டுள்ளது. பன்னாட்டு தமிழ் நடுவத்தின்தொடக்கவிழாவை சென்னையில் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமானகருணாநிதி தொடங்கி வைத்தார்.

நியூயார்க்கில் தமிழர்களுகான நவீன வசதி கொண்ட மிகப் பெரிய கட்டிடம் ஒன்றைகட்டவிருப்பதாக பன்னாட்டுத் கமிழ் நடுவத்தின் நிறுவனர் வின்ஸ்டன் வி. பஞ்சாட்சரம்கூறினார்.

பஞ்சாட்சரம் 1969ம் ஆண்டு முதல் அமெரிக்கா மன்ஹாட்டன் நகரில் டாக்டராகஇருந்து வருகிறார். இவரது மனைவியும் டாக்டர் அவரும் தன் கணவருடன்மன்ஹாட்டனில் வசித்து வருகிறார்.

நியூயார்க்கிலிருந்து சென்னைக்கு வந்து பன்னாட்டுத் தமிழ் நடுவத்தின் தொடக்கவிழாவிற்கு தலைமை வகித்த பஞ்சாட்சரம் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்தஉலகம் முழுவதும் தமிழர்கள் பரவி உள்ளனர். அவர்களின் நலனுக்கு பாடுபடும்நோக்கத்துடன்தான் பன்னாட்டுத் தமிழ் நடுவம் அமைக்கப்பட்டிருக்கிறது.

பன்னாட்டுத் தமிழ் நடுவம் நியூயார்க் நகரிலிருந்து செயல்படும். ஆனாலும் இதன்தலைமையகம் சென்னையில்தான் இருக்கும்.

நியூயார்க்கில் தமிழர்களுக்கென எல்லா நவீன வசதிகளையும் கொண்டபிரம்மாண்டமான கட்டிடம் ஒன்று கட்டவிருக்கிறோம்.

தமிழர்களின் கலை, கலாச்சாரம் ஆகியவற்றை எடுத்துக்கூறும் வளாகம், நூல் நிலையவளாகம், பல்கலைக்கலைக்கழக வளாகம், மியூசியம், உணவு விடுதி, முதியோர்குடியிருப்பு ஆகியவவை இந்த கட்டிடத்தில் இடம் பெறும்.

உலகில் தமிழை வளர்ப்பதும், தமிழ் கல்வியை பெருக்குவதும், தமிழ்ப்பண்பாட்டைமேம்படுத்துவதும், தமிழர்கள் நலனை பாதுகாப்பதுமே பன்னாட்டுத் தமிழ் நடுவத்தின்நோக்கம். அதற்க்காக இந்த அமைப்பு பாடுபடும்.

தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் சரி, அவர்கள் இந்த அமைப்பில் உறுப்பினராகலாம்என்றார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற