தீவிர பிரசாரத்தில் இறங்குகிறார் ஜெ.

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

உள்ளாட்சித் தேர்தலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தீவிர பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார். அவரது பிரசாரம் 7ம்தேதி -முதல் தொடங்குகிறது.

உள்ளாட்சித் தேர்தல் 16 மற்றும் 18 ஆகிய தேதிகளில் -நடக்கிறது. இதற்கான தேர்தல் பிரசாரத்தை 7ம் தேதிஜெயலலிதா துவக்குகிறார்.

மொத்தம் 9 -நாட்களுக்கு பிரசாரம் செய்யவுள்ள அவர் 2 -நாட்கள் சென்னையில் தீவிர பிரசாரம் செய்யவுள்ளார்.

-முதல்வர் பதவியை ஜெயலலிதா இழந்துள்ளது ஓரளவு அனுதாப அலையை அவருக்கு உருவாக்கியுள்ளதாகக்கூறப்படுகிறது. இதனை ச-ரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் பொருட்டு ஜெயலலிதா தீவிர பிரசாரத்தில் ஈடுபடதிட்டமிட்டுள்ளார்.

அதேபோல, முதல்வர் பன்னீர் செல்வம் தவிர மற்ற 23 அமைச்சர்களும் தங்களது மாவட்டங்களில் தீவிரபிரசாரத்தில் ஏற்கனவே ஈடுபட்டு வருகிறார்கள்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற