பாகிஸ்தானில் மதக்கலவரம் வெடிக்கும் அபாயம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கட்டா:

ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் பாகிஸ்தானில் உள்ள கிறிஸ்தவர்கள் மீது முஸ்லீம்கள்தாக்குதல் நடத்துவார்கள் என அஞ்சப்படுகிறது. எனவே போர் ஆரம்பித்தால் அங்கு பெரும் மதக்கலவரம்வெடிக்கும் என்று கூறப்படுகிறது.

ஆப்கான் மீது அமெரிக்கா எந்நேரத்திலும் போரை ஆரம்பிக்கும் நிலையில் உள்ளது.

அவ்வாறு போர் தொடங்கப்படுமானால் பாகிஸ்தானில் உள்ள கிறிஸ்தவர்களை தாக்குவோம் என்று அங்குள்ள சிலமுஸ்லீம் அமைப்புகள் அறிவித்துள்ளன.

இதைத்தொடர்ந்து சாக்ரெட் ஹார்ட் கத்தோலிக்க தேவாலயத்தில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கூடி, அமெரிக்காதீவிரவாதத்தை அழிக்கட்டும். ஆனால் அதில் கிறிஸ்தவர்கள் பழியாகக் கூடாது என்று பிராார்த்தனை செய்தனர்.

மேலும் பாகிஸ்தானில் கடந்த செவப்டம்பர் 11ம் தேதியிலிருந்தே, முஸ்லீம்களின் நடவடிக்கைகளில் மாற்றம்ஏற்பட்டுள்ளது என்கிறார்கள்.

நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்களே, அதற்குப் பிறகு ஒரு இடைவெளியை கடைபிடிக்கஆரம்பித்துவிட்டார்களாம்.

ஆப்கான் எல்லையில் ஏதாவது சிறு சண்டை ஆரம்பித்தாலும், பாகிஸ்தானில் உள்ள கிறிஸ்தவர்கள் தாக்கப்படுவதுஉறுதி என்று கூறப்படுகிறது.

தனது உண்மையான பெயரை குறிப்பிட வேண்டாம் என்று வேண்டிய பிறகு ஒரு கிறிஸ்தவ ஆசிரியர் கூறுகையில்,தினமும் எங்களுக்கு முஸ்லீம் மக்களிடம் இருந்து அச்சுறுத்தல் வருகிறது. சில நேரங்களில் எங்களால் நிம்மதியாத்தூங்கமுடிவதில்லை. ஆப்கான் மீது தாக்குதல் ஆரம்பமானால் நாங்கள் கொல்லப்படுவோம் என்று பயமாகஇருக்கிறது என்றார்.

மற்றொரு பள்ளி ஆசிரியர் கூறுகையில், அமெரிக்க அதிபர் புஷ் தனது உரையில், தீவிரவாதிகளுக்கு எதிரானபெரும்போரை அமெரிக்கா நடத்தும் என்றார். அதை சில மதவாதிகள் தவறாகப் புரிந்துகொண்டு, முஸ்லீம்-கிறிஸ்தவர் மதப்போராக மாற்ற முயன்று வருகிறார்கள் என்றார்.

டெலிபோன் நிறுவனத்தில் பணிபுரியம் அவரது நண்பர் கூறுகையில், இதுவரை தினமும் எங்களுடன் ஒன்றாகஉட்கார்ந்து பேசிய, சாப்பிட்ட சில முஸ்லீம் நண்பர்களே எங்களைத் தாக்குவோம் என்கிறார்கள். போர்ஆரம்பித்தால் உங்களை தாக்கும் முதல் ஆள் நாங்களாகத் தான் இருப்போம் என்கிறார்கள். நாங்கள் என்னசெய்வது என்றார் அவர்.

இவ்வாறு பாகிஸ்தானில் உள்ள கிறிஸ்தவர்களுக்கு ஏகப்பட்ட நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. இதனால் அங்குள்ளகிருஸ்தவர்கள் பெரும் பீதியில் இருக்கிறார்கள். ஆனால் இதுகுறித்து முஷாரப் அரசு எந்த நடவடிக்கையும்எடுத்ததாகத் தெரியவில்லை. எனவே போர் ஆரம்பித்தால் அங்கு பெரும் மதக்கலவரம் வெடிக்கும் என்பதில்சந்தேகமில்லை.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற