உள்ளட்சித் தேர்தல் வேட்பு மனுத்தாக்கல் முடிந்தது

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் திங்கள்கிழமை பிற்பகல் 3மணியுடன் முடிவடைந்தது.

தமிழக உள்ளாட்சித் தேர்தல் வரும் 16 மற்றும் 18 ஆகிய தேதிகளில் -நடக்கிறது. இதில்திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும்,காங்கிரஸ் தலைமையில் இன்னொரு கூட்டணியும் மோதுகின்றன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பும் தனித்துபோட்டியிடுகின்றன.

வேட்பு மனுத்தாக்கல் திங்கள்கிழமை மாலை 3 மணியுடன் முடிந்தது. வேட்பு மனுக்கள்செவ்வாய்க்கிழமை ப-ரிசீலனை செய்யப்படுகின்றன. வேட்பு மனுக்களை வாபஸ்பெறுவதற்கு 3ம் தேதி கடைசி -நாளாகும்.

16ம் தேதி -முதல் கட்ட வாக்குப் பதிவும், 18ம் தேதி இரண்டாவது கட்ட வாக்குப்பதிவும் -நடக்கிறது.

மொத்தம் 3 லட்சம் பேருக்கும் மேல் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற