உள்ளாட்சி தேர்தல்: வேட்பு மனுத் தாக்கல் இன்று முடிவடைகிறது

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

வரவிருக்கும் தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்பு மனுத் தாக்கல் செய்ய இன்று(திங்கள் கிழமை) கடைசி நாள் என்பதால் ஏராளமானவர்கள் திங்கள்கிழமை மனுதாக்கல் செய்து வருகின்றனர்.

இந்த மாதம் 16 மற்றும் 18ம் தேதிகளில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்நடைபெறவுள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் சென்ற மாதம் 24ம் தேதி தொடங்கியது. இன்று(திங்கள்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.

தி.மு.க. தலைமையில் ஒரு அணியும், அதிமுக தலைமையில் ஒரு அணியும், காங்கிரஸ்தலைமையில் 10 கட்சிகள் கொண்ட கூட்டணியும் தேர்தல் களத்தில் உள்ளன.

விடுதலை சிறுத்தைகள் அமைப்பு, மதிமுக, மார்க்சிஸ்ட் கட்சி ஆகியவை தனித் தனியேபோட்டியிடுகின்றன.

அரசியல் கட்சிகளின் தொகுதி பங்கீடும் முடிவடைந்து விட்டது. பல அரசியல் கட்சியின்வேட்பாளர்களும் வேட்பு மனுவும் தாக்கல் செய்துவிட்டனர்.

ஆனால், பலர் இன்று தான் வேட்புமனு தாக்கல் செய்கின்றனர். இதனால் மாநகராட்சி,நகராட்சி அலுவலகங்களில் வேட்பாளர்கள் கூட்டம் அலை மோதுகிறது.

திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் முடிவடைந்ததும், புதன்கிழமை (3ம் தேதி)வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வேட்பு மனுக்களை வாபஸ் பெறவெள்ளிக்கிழமை (5ம் தேதி) கடைசி நாளாகும்.

தேர்தல் 16 மற்றும் 18ம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடக்கும். வாக்கு எண்ணிக்கை21ம் தேதி தொடங்கும். 25ம் தேதிக்குள் புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்பார்கள்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற