ஜெ. வீட்டுக்கு அருகே குடியேறுகிறார் பன்னீர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டிற்கு அருகே தற்போதைய முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் குடியேறுகிறார்.இதற்காக பாதுகாவலர்கள் தங்கி வந்த பழைய வீடு புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

ஜெயலலிதா முதல்வர் பதவியை இழந்ததும் ஒ.பன்னீர் செல்வம் புதிய முதல்வராக நியமிக்கப்பட்டார். இருப்பினும்அமைச்சருக்கான பங்களாவிலேயே அவர் இன்னும் குடியிருந்து வருகிறார்.

இந்த நிலையில் பன்னீர் செல்வம், ஜெயலலிதா வீட்டுக்குள்ளேயே குடியேறுவார் என்று முதலில் கூறப்பட்டது. இந்தநிலையில் ஜெயலலிதா வீட்டுக்கு எதிரேயுள்ள காலி பங்களாவில் தற்போது பன்னீர் செல்வம் குடியேறவுள்ளார்.இதற்காக அந்த வீடு புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

பொதுப்பணித்துறை பொறியாளர்கள் வெகு வேகமாக அந்த பங்களாவை புதுப்பித்து வருகின்றனர். இன்னும் சிலநாட்களில் இந்த பணி முடிவடையும் என்று தெரிகிறது. அதன் பிறகு அவர் ஜெயலலிதா வீட்டுக்கு அருகேயேகுடிபுகுந்து விடுவார்.

பாதுகாப்பை கருத்தில் கொண்டே பன்னீர் செல்வத்தை ஜெயலலிதா வீட்டுக்கு அருகில் குடியமர்த்துவதாககூறப்பட்டாலும் கூட, தனது நேரடிக் கண்காணிப்பில் அவரை வைத்துக் கொள்ளும் விதமாகவே தனது வீட்டுக்குஅருகேயே அவரை ஜெயலலிதா குடியமர்த்துவதாக கூறப்படுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற