குஜராத் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு அரசு நிதியுதவி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

குஜராத் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டு தமிழகம் வந்து சேர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25,000 நிதியை முதல்வர்ஓ.பன்னீர் செல்வம் திங்கள்கிழமை வழங்கினார்.

குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தையடுத்து அங்கிருந்த தமிழகத்தைச் சேர்ந்த பலர் தமிழகத்திற்கு தப்பி வந்தனர்.

அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25,000 நிதியுதவி வழங்கியுள்ளது தமிழக அரசு.

இதற்கான காசோலையை முதல்வர் பன்னீர் செல்வம் 41 பேரின் குடும்பத்தினருக்கு திங்கள்கிழமை வழங்கினார். மொத்தம் ரூ.10.25 லட்சம் நிதிக்கான காசோலைகளை வழங்கினார் முதல்வர் பன்னீர் செல்வம்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற