டெல்லி:
இந்தியாவின் பொறுமையை பாகிஸ்தான் சோதித்து வருகிறது என அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சுக்கு எழுதியுள்ள கடிதத்தில்பிரதமர் வாஜ்பாய் கூறியுள்ளார்.
இது தொடர்பாக புஷ்சுக்கு பிரதமர் வாஜ்பாய் கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
இது போன்ற தீவிரவாதத் தாக்குதல்கள் இந்தியாவின் பாதுகாப்புக்கே பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளன. எங்கள் பொறுமைக்கும்எல்லை உண்டு என்பதை பாகிஸ்தான் உணர வேண்டும். இந்தத் தாக்குதல் நாடு முழுவதும் மக்கள் மத்தியில் கொந்தளிப்பைஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் தீவிரவாத அமைப்புகளை செயல்பட விட மாட்டோம் என அந் நாட்டு அதிபர் தொலைக்காட்சியில் கூறிய சிலநாட்களில் இத் தாக்குதல் நடந்துள்ளது.
நான் மிகுந்த வருத்தத்துடன் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்பு ஜெயிஸ்-ஏ-முகம்மத் இத்தாக்குதலுக்கு பொறுபேற்றுள்ளது. இத் தாக்குதலைக் கூட பாகிஸ்தானைச் சேர்ந்த வஜஹத் ஹூசைன் என்பவன் தான் தலைமைதாங்கி நடத்தியுள்ளான்.
சர்வதேச தீவிரவாதத்துக்கு எதிரான அமெரிக்காவின் போருக்கு இந்திய முழு ஆதரவளித்து வருகிறது. நீங்கள் (ஜார்ஜ் புஷ்)தீவிரவாதிகளை மட்டுமல்ல, அவர்களை ஆதரிக்கும் நாடுகளையும் வேட்டையாடுவோம் என்று கூறினீர்கள். அதை முழுமையாகசெயல்படுததுவீர்கள் என்று நம்புகிறோம்.
இவ்வாறு வாஜ்பாய் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!