உள்ளாட்சித் தேர்தல்: வேட்பு மனுக்கள் பரிசீலனை தொடங்கியது

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

உள்ளாட்சித் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்பு மனுக்கள் புதன்கிழமை பரிசீலனை செய்யப்படுகின்றன.

உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த மாதம் 24ம் தேதி துவங்கியது. 1ம் தேதியுடன் அது முடிவடைந்தது. 2ம்தேதி காந்தி ஜெயந்தியாதலால் வேட்பு மனு பரிசீலனை துவங்கவில்லை. அதற்குப் பதிலாக இன்று வேட்பு மனுக்கள் பரிசீலனைசெய்யப்படும்.

குற்ற வழக்கில் தண்டனை பெற்றவர்கள், கிரிமினல் குற்றவாளிகள் ஆகியோரது மனுக்கள் பரிசீலனையின்போது தள்ளுபடிசெய்யப்பட்டு விடும் என்று ஏற்கனவே தேர்தல் ஆணையம் கூறியுள்ளது நினைவிருக்கலாம்.

5ம் தேதிக்குள் மனுக்களை வாபஸ் பெற்றுக் கொள்ள விரும்பினால் பெற்றுக் கொள்ளலாம். அன்று மாலை 3 மணிக்கு மேல் இறுதிவேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

16 மற்றும் 18 ஆகிய இரு தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும். 21ம் தேதி வாக்குகள் எண்ணப்படும்.

இதற்கிடையே மாநகராட்சி மேயர் பதவிகளுக்கான போட்டிகளில் சென்னையில்தான் அதிக அளவில் வேட்பு மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டுள்ளன. இங்கு மொத்தம் 36 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

இதற்கு அடுத்து திருநெல்வேலியில் 24 பேரும், கோவையில் 19 பேரும், மதுரையில் 18 பேரும், சேலத்தில் 15 பேரும், திருச்சியில்10 பேரும் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். இருப்பினும் இவர்களில் பெரும்பாலனவர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுவிடும் என்று தெரிகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற