நாவரசு கொலை: ராகிங் புகழ் ஜான் டேவிட் விடுதலை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழக மாணவர் நாவரசை கொலை செய்த வழக்கில்இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட ஜான்டேவிட் சென்னை உயர் நீதிமன்றத்தால் இன்றுவிடுதலை செய்யப்பட்டார்.

அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் படித்து வந்தவர் நாவரசு.இவர் சென்னை பல்கலைக்கழக துணை வேந்தராக இருந்த பொன்னுசாமியின் ஒரேமகன்.

கடந்த 1996ம் ஆண்டு நவம்பர் மாதம் 6ம் தேதி நாவரசு கொலை செய்யப்பட்டார்.

சீனியர் மாணவரான ஜான் டேவிட் அவரைக் கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

தான் சொன்னதை நாவரசு கேட்காததால் ஆத்திரமடைந்து அவரை கொலைசெய்ததாகவும், பின்னர் தலை, உடல் என தனித் தனியாக வெட்டி சூட்கேஸ்களில்அடைத்து சென்னை தாம்பரத்தில் ஒரு பெட்டியையும், ஒரு பெட்டியை பஸ்சிலும்வைத்துவிட்டு தலைமறைவாகி விட்டதாகவும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். கடலூர் முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில்நடந்த வழக்கு விசாரணையின் இறுதியில் ஜான் டேவிட்டிற்கு இரட்டை ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து ஜான் டேவிட் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பீல்செய்யப்பட்டது. வழக்கை நீதிபதிகள் மலைசுப்ரமணியம், பக்தவத்சலம் ஆகியோர்கொண்ட பெஞ்ச் விசாரித்தது.

ஜான் டேவிட் மீதான புகாருக்கு சரியான ஆதாரங்கள் இல்லை என்று கூறி அவரைநீதிபதிகள் விடுதலை செய்தனர்.

நீதிபதிகள் தங்களது தீர்ப்பில், அரசு தரப்பு சாட்சிகள் போதுமானதாக இல்லை. உடல்உறுப்புகளை அறுத்து ஹாஸ்டலில் இந்தத் கொலையை டேவிட் மட்டுமேசெய்துள்ளதாக கூறப்படுவது நம்ப முடியாததாக உள்ளது.

மாணவர்களும் இதைப் பார்த்ததாக கூறவில்லை. சந்தேகத்தின் அடிப்படையில் ஜான்டேவிட்தான் இதைச் செய்தார் என்று கூறமுடியாது. அரசு தரப்பில் சரியான சாட்சிகள்கொண்டு வரப்படவில்லை.

குற்றச்சாட்டை நிரூபிக்க அரசு தவறிவிட்டது. எனவே ஜான் டேவிட் மீதான அனைத்துகுற்றங்களும் ரத்து செய்யப்படுகின்றன. இந்த வழக்கை கீழ் கோர்ட் சரியானபடிவிசாரிக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற