இறந்தவர்களின் விவரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை செங்குன்றம் அருகேயுள்ள கோட்டூர், அத்திப்பாக்கம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில்கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் எண்ணிக்கை 36ஆக உயர்ந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு சென்னை செங்குன்றம் அருகேயுள்ள கோட்டூரில் விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை,கோட்டூர், அத்திப்பபாக்கம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த 50க்கும் அதிமானோர் குடித்தனர்.

சாராயத்தை குடித்தவுடன் பலரும் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர். இவர்கள் உடனே சென்னை ஸ்டான்லிமருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே 11 பேர்இறந்துபோனார்கள். மேலும் பலர் மருத்துவமனையில் இறந்து போனார்கள்.

இறந்தவர்களின் எண்ணிக்கை 36ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் ஆபத்தான நிலையில் ஸ்டான்லிமருத்துவமனையிலும, சென்னை அரசு பொது மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சாராயத்தில் மெத்தனால் கலந்திருந்ததுதான் சாராயம் குடித்தவர்கள் இறந்து போனதற்கு காரணம் என்றும்தெரியவந்துள்ளது.

கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் பெயர்களும் தெரியவந்துள்ளது. அவர்கள் பெயர்கள் வருமாறு:

1. அன்பழகன் (வயது 38)
2. சுப்ரமணியன் (வயது 59)
3. முருகன் (வயது 28)
4. துரைசாமி (வயது 45)
5. மகாலிங்கம் (வயது 38)
6. டேனியல் (வயது 25)
7. அண்ணாமலை (வயது 65)
8. ராமதாஸ் (வயது 40)
9. பாளையம் (வயது 30)
10. சேகர் (வயது 40)
11. மணி (வயது 38)
12. தீன் பாய் (வயது 65)
13. முனுசாமி (வயது 45)
14. பழனி (வயது 45)
15. காசி (வயது 50)
16. துரை (வயது 30)
17. மாரி (வயது 30)
18. பாலு (வயது 35)
19. தனுஷ்கோடி (வயது 42)
20. ரமேஷ் (வயது 30)
21. முனுசாமி (வயது 45)
22. செல்லப்பன் (வயது 45)
23. மணி (வயது 40)
24. காளியப்பன் (வயது 54)
25. முத்து (வயது 32)
26. துரைபாபு (வயது 35)
27. ரமணரெட்டி (வயது 38)
28. ஆறுமுகம் (வயது 60)
29. சந்திரமோகன் (வயது 60)
30. சந்திரா (வயது 35)
31. நீலா (வயது 40)
32. நாகம்மாள் (வயது 45)

இறந்த மற்ற 4 பேரின் பெயர், விவரம் தெரியவில்லை. இறந்தவர்கள் அனைவரும் கூலித்தொழிலாளிகள் என்பதுகுறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+