For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தலிபான்களை புரட்டி எடுக்கும் நார்த்தர்ன் அலையன்ஸ்

By Staff
Google Oneindia Tamil News

மஷார்-ஏ-ஷெரீப் (வடக்கு ஆப்கானிஸ்தான்):

அமெரிக்க விமானத் தாக்குதலால் நிலை குலைந்து போயுள்ள தலிபான் ராணுவத்தினரை எதிர்ப் படையினரான நார்த்தர்ன் அலையன்ஸ்படையினர் கடுமையாகத் தாக்க ஆரம்பித்துள்ளனர்.

இதனால் தரையிலும் வானிலும் இருந்தும் கடும் தாக்குதலை தலிபான்கள் எதிர் கொண்டுள்ளனர்.

நாட்டின் 10 சதவீதப் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள நார்த்தர்ன் அலையன்ஸ் படைக்கு இந்தியா, ரஷ்யா, ஈரான்,தஜிகிஸ்தான் ஆகிய நாடுகள் முழு ஆதரவு தெரிவித்துள்ளன. இந்தப் படையினரால் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதியாக அங்கீகரிக்கப்பட்டபுர்ஹானுதீன் ரப்பானியைத் தான் இந்தியாவும் ஜனாதிபதியாக அங்கீகரித்துள்ளது. ரப்பானிக்கு இந்தியா அடைக்கலம் கூட கொடுத்துஉதவியது.

கடந்த 5 ஆண்டுகளாகவே தலிபான்களை எதிர்த்துக் கடுமையாகப் போராடி வரும் இந்தப் படையினர் இப்போது அமெரிக்கத் தாக்குதலைதங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு தலிபான்களை கடுமையாகத் தாக்க ஆரம்பித்துள்ளனர்.

நேற்று இவர்கள் நடத்திய தாக்குதலில் தலிபான் தரப்பில் பலத்த உயிர்ச் சேதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 30 தலிபான்வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 7 தலிபான் கமாணடர்களையும் இவர்கள் பிணைக் கைதிகளாக பிடித்துள்ளனர்.

ஹெராட் நகரையடுத்த ஒரு கிராமத்தையும் இவர்கள பிடித்துள்ளனர். தலைநகர் காபூலை நோக்கி முன்னேறி வரும் இவர்களுக்குரஷ்யாவும் ஆயுதங்களை வழங்க ஆரம்பித்துள்ளது.

இதனால் புதிய தெம்புடன் இவர்கள் தாக்குதல் நடத்த ஆரம்பித்துள்ளனர். விமானத் தாக்குதல்களுக்குப் பின்னர் தரையில் தலிபான்களுடன்மோத இவர்களின் உதவியை அமெரிக்கா கோரியுள்ளது. இப்போது அமெரிக்கா இவர்களுடன் கலந்து ஆலோசித்த பின்னர் தான்முக்கியத் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இவர்களை காபூலை நோக்கி முன்னேச் செய்யும் நோக்கத்துடன் தான் மஷார்-ஏ-ஷெரீப் நகரில் உள்ள தலிபான்கள் மீது அமெரிக்காகுண்டு மழை பொழிந்து வருகிறது. இந்த முக்கிய நகரைப் பிடித்தால் தான் நார்த்தர்ன் அலையன்ஸ் படையினரால் காபூலை நோக்கிமுன்னேற முடியும்.

இந்த நார்த்தர்ன் அலையன்ஸ் படையினருக்கு எதிராகப் போராட தலிபான்களுக்கு பாகிஸ்தான் தான் ஆயுதங்களையும் கொடுத்து போர்பயிற்சியும் கொடுத்தது. இப்போதும் பாகிஸ்தான் ராணுவத்தின் முன்னாள் ஜெனரல்களும் கமாண்டர்களும் தான் தலிபான் படையினரைவழி நடத்தி வருகின்றனர்.

மேலும் பாகிஸ்தான் ராணுவத்தின் சார்பில் அனுப்பப்பட்ட பல்லாயிரக்கணக்கான வீரர்கள் தலிபான் தரப்பில் இருந்து கொண்டு எதிரிப்படையினரைத் தாக்கி வருகின்றனர். பாகிஸ்தானி ரெகுலர்ஸ் என்று அழைக்கப்படும் இவர்கள் தான் ஆப்கான் தீவிரவாதிகளுடன்இணைந்து இந்தியாவில் கார்கிலில் ஊடுருவியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது நார்த்தர்ன் அலையன்ஸ் படையினரின் தாக்குதல் அதிகரித்துள்ளதால், தலிபான்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு இந்தபாகிஸ்தான் படையினர் முன்னணியில் நின்று நார்த்தர்ன் அலையனஸ் படையினரைத் தாக்க ஆரம்பித்துள்ளனர்.

இத் தகவலை நார்த்தர்ன் அலையன்ஸ் படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தப் படையின் தலைவராக இருந்த அகமத் ஷா மசூதை தலிபான், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., பின்லேடன் கும்பல் ஆகியவை திட்டமிட்டுகொன்றன. கடந்த மாதம் 8ம் தேதி அவரை நிருபர்கள் என்ற போர்யிைல் சந்திக்க வந்த பின்லேடனின் தற்கொலைப் படையினர் 3 பேர்குண்டுகளை இயக்கிக் கொன்றனர் என்பது நினைவுகூறத்தக்கது.

இந் நிலையில் ஆப்கானிஸ்தானின் உள் விவகாரங்களில் தலையிடுவதை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ள வேண்டும் என ஆப்கானிஸ்தான்நாட்டு முன்னாள் மன்னர் ஷகீர் ஷா தெரிவித்துள்ளார். தலிபான்களை நீக்கிவிட்டு இவரை அதிபராக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.இதற்கு நார்த்தர்ன் அலையன்ஸ் படையினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஷகீர் ஷா இப்போது இத்தாலி நாட்டு அரசின் பாதுகாப்புடன் ரோம் நகரில் வசித்து வருகிறார். பாகிஸ்தானையும் தலிபான்களையும்அடியோடு வெறுப்பவர் இவர்.

தலிபான்களை ஆட்சியில் இருந்து நீக்கிவிட்டு நார்த்தர்ன் அலையன்சுக்கு வேண்டிய நபர் யாரையும் ஆட்சியில் அமர்த்தக் கூடாது எனநேற்று பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் கூறியிருந்தார்.

இதற்கு பதிலடியாகத் தான் எங்கள் நாட்டு விஷயத்தில் பாகிஸ்தான் தலையிடுவதை நிறுத்த வேண்டும் என ஷகீர் ஷா கூறியுள்ளார்.

நார்த்தர்ன் அலையனஸ் படையினர் உதவியுடன் யார் ஆட்சிக்கு வந்தாலும் பாகிஸ்தானுக்கு பெரும் பிரச்சனை உருவாகும் என்பது மட்டும்நிச்சயம். இதனால், இந்தப் படையினருக்கு இந்தியா முழு ஆதரவு தெரிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல் இந்தப் படையினரின் ஆதரவுடன்வடக்கு ஆப்கானிஸ்தான் எல்லையில் ஆப்கானிய அகதிகளுக்காக ஒரு மருத்துவமனையையும் இந்தியா அமைத்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X