For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விவசாயிகளுக்கும், குடிசைவாசிகளுக்கும் இலவச மின்சாரம் உண்டு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

நடுத்தர மக்கள மீது பஸ் கட்டணம், மின் கட்டணத்தைத் திணித்துள்ள அரசு விவசாயிகள் மற்றும் குடிசைவாசிகளுக்கான இலவச மின்சாரம்தொடர்ந்து நீடிக்கும் என்று அறிவித்துள்ளது.

இதனால் நடுத்தர மக்கள் கடும் எரிச்சலடைந்துள்ளனர். தங்கள் மீது அனைத்து சுமையையும் அரசு ஏற்றுவதாக பொது மக்கள் கருதுகின்றனர்.

ஓட்டு வங்கிகளை மனதில் கொண்டு தான் அரசு இப்படி பணக்கார விவசாயிகளுக்கு சலுகையைத் தொடர்ந்து கொண்டுள்ளது. இந்த இலவசமின்சாரத்தால் ஏழை விவசாயக் கூலிகளுக்கு பலனே இல்லை. ஏனெனில் அவர்களிடம் நிலமே கிடையாது.

அப்படியே நிலம் இருந்தாலும் மோட்டரோ கிணரோ இருப்பதில்லை.

மோட்டர் வைத்து விவசாயம் செய்பவர்கள் எல்லோருமே பெரும்பாலும் வசதியான விவசாயிகள். இவர்களுக்கு ஏன் தொடர்ந்துமின்சாரத்தை இலவசமாகத் தந்துவிட்டு அந்த சுமையை எங்கள் மீது ஏற்ற வேண்டும் என நடுத்தர மக்கள் கோபத்துடன் கேட்கின்றனர்.

அதே போல குடிசைகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதும் ஓட்டுக்காகத் தான்.

நடுத்தர மக்கள் ரிடையர் ஆகும் பணத்தில் ஊருக்கு வெளியே இடம் வாங்கி அதில் வீடு கட்டினால் மின் கட்டணம் செலுத்த வேண்டும்.

ஆனால், அதே நேரத்தில் அரசு நிலத்தையும் புறம்போக்கு நிலத்தையும் ஆக்கிரமித்து குடிசை போட்டு அதை வாடகைக்கு விட்டு வரும்அரசியல் கட்சிக்காரர்களுக்கு மின் கட்டணம் இல்லை. அரசிடம் பணமில்லை என்றால் அனைவரிடமும் பணம் வசூப்பது தான் நியாயம்என மக்கள் கூறுகின்றனர்.

அதே போல வழிபாட்டு தலங்களுக்கான மின் கட்டணமும் உயர்த்தப்படவில்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X