For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பின்லேடனைப் பிடிக்க தரைப்படைத் தாக்குதலுக்கு அமெரிக்கா தயார்

By Staff
Google Oneindia Tamil News

காபூல்:

ஆப்கானிஸ்தானில் போர் ஆரம்பித்ததில் இருந்து இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய விமானத்தாக்குதலை அமெரிக்கா இன்று நடத்தியது. நூற்றுக்கணக்கான அமெரிக்க போர் விமானங்கள் காண்டஹார்நகரின் மீது தொடர்ந்து குண்டுகளை வீசியவண்ணம் உள்ளன.

இப்போது தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரே நகரம் இது தான். இந்த நகரைச் சுற்றிய குகைகளில் தான்ஒசாமா பின் லேடனும், முல்லா ஒமரும் பதுங்கியிருப்பதாக அமெரிக்க கருதுகிறது.

இந்த நகரைக் கைப்பற்ற நார்த்தர்ன் அலையன்ஸ் படைகள் எடுத்த முயற்சிகள் இதுவரை பலனளிக்கவில்லை.காண்டஹாருக்குள் அலையன்ஸ் படைகளால் நுழைய முடியவில்லை. தலிபான்களின் பதிலடித் தாக்குதல் தீவிரமாகஉள்ளது.

நார்த்தர்ன் அலையன்ஸ் படைகள் இன்று இந்த நகருக்குள் நுழைந்துவிட்டதாகக் கூறப்பட்டாலும் இது உறுதிசெய்யப்படவில்லை. நார்த்தர்ன் அலையன்ஸ் கூடுதல் படைகள் உள்ளே நுழைவதற்கு வசதியாக அமெரிக்கவிமானங்கள் கடும் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இதற்கு முன் நடத்தப்பட்ட தாக்குதல்களை விட இது மிகக் கடுமையானது என பென்டகன் கூறியுள்ளது.

அமெரிக்கத் தரைப்படை குவிப்பு:

இந் நிலையில் காண்டஹாரின் மீது தரைப்படைத் தாக்குதலுக்கும் அமெரிக்கா தயாராகி வருகிறது. இந்த நகரில்ஒமரும், லேடனும் இருப்பதாகக் கருதப்படுவதால் இந்த நகரை தானே கைப்பற்ற அமெரிக்க திட்டமிட்டுள்ளது.

சுமார் 1,000 அமெரிக்கப் படையினர் காண்டஹாரைச் சுற்றி முற்றுகையிட்டுள்ளனர். தரைப்படைத் தாக்குதல்தாக்குதலுக்கு பயந்து ஆயிரக்கணக்கான மக்கள் அந்த நகரை விட்டு தப்பி வெளியேறியவண்ணம் உள்ளனர்.

ஒசாமாவை பிடித்து விடலாம்:

தலிபான் படையினர் பெரும்பாலானவர்கள் ஆயுதங்களைப் போட்டுவிட்டு ஓடிவிட்டதால் இப்போது அரேபியத்தீவிரவாதிகள் தான் காண்டஹாரை காத்து வருகினறனர். இந்த நகருக்குள் நுழைந்துவிட்டால் ஒசாமாவைப்பிடித்துவிட முடியும் என நாராத்தர்ன் அலையன்ஸ்சின் ராணுவத் தளபதி முகம்மத் பகீம் கூறினார்.

ஜெர்மன் பேச்சுவார்த்தையில் சிக்கல்:

ஆப்கானிஸ்தானில் அடுத்த ஆட்சி அமைப்பது குறித்து பல்வேறு இனத் தலைவர்கள் இடையே நடைபெற்று வரும்பேச்சுவார்த்தையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

முக்கிய இனமான புஷ்தூன் இனத்தைச் சேர்ந்த அப்துல் ஹாஜி காதிர் தலைமையிலான குழு பேச்சுவார்த்தையில்இருந்து வெளியேறுவதாக அறிவித்துவிட்டு எழுந்து சென்றுவிட்டது.

நார்த்தர்ன் அலையன்சில் உள்ள பிற இனத்தினர் கூறிய பல திட்டங்களை அவர்கள் ஏற்க மறுத்துவிட்டுஆப்கானிஸ்தான் திரும்பிச் சென்றுவிட்டனர். இதனால் பேச்சுவார்த்தையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பணத்ததை அள்ளி வீசிய பின்லேடன்:

தலிபான் தலைவர் முல்லா ஒமருக்கு பணத்தைக் காட்டித் தான் ஆப்கானிஸ்தானையே பின் லேடன் தனதுகட்டுப்பாட்டில் கொண்டு வந்ததாக சமீபத்தில் தலிபான் அரசிடம் இருந்து விலகி வந்த உள்துறை அமைச்சர்முகம்மத் கக்ஷர் கூறினார்.

இவர் சி.ஐ.ஏவுக்கு உளவாளியாகவும் செயல்பட்டு வந்தார்.

அவர் அமெரிக்க பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், ஒமருக்கு விலை உயர்ந்த கார்களையும், தலிபான் படைக்குவாகனங்களையும் வாங்கிக் கொடுத்தார் ஒசாமா பின் லேடன். ஒமர் கேட்டபோதெல்லாம் பணம் கொடுத்தார்.ஆயுதங்கள் வாங்கிக் கொடுத்தார். இதையடுத்து ஆப்கானிஸ்தானில் அல்-காய்தா தீவிரவாத அமைப்புக்கு பயிற்சிமுகாம்கள் அமைத்துக் கொள்ள ஒமர் அனுமதித்தார்.

அல்-காய்தா மூலம் தான் ஒமருக்கு பணம் வந்தது. இதுவரை குறைந்தபட்சம் 100 மில்லியன் டாலராவது அவர்ஒமருக்குக் கொடுத்திருப்பார் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X