இந்தியக் கிரிக்கெட் வாரியம்- ஐ.சி.சி. உடன்பாடு
இஸ்லாமாபாத்:
ரெப்ரீ டென்னசால் 6 இந்திய வீரர்களுக்குத் தண்டனை வழங்கப்பட்ட விவகாரம் குறித்து இந்தியக் கிரிக்கெட்வாரியமும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் பேசி, சுமூக உடன்பாட்டிற்கு வந்தது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட்வாரியம் மகிழ்ச்சியும் திருப்தியும் அடைவதாகத் தெரிவித்துள்ளது.
தென் ஆப்ரிக்கா இந்திய ஆகிய அணிகளுக்கிடையே தென் ஆப்ரிக்காவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டின்போது, சச்சின் டெண்டுல்கர், வீரேந்தர் ஷேவாக், கங்குலி உட்பட 6 இந்திய வீரர்களுக்கு மேட்ச் ரெப்ரீ மைக்டென்னஸ் தண்டனை வழங்கினார்.
அதன்படி வீரந்தர் ஷேவாக் இந்தியா ஆடும் முதல் சர்வதேச டெஸ்ட்டில் விளையாடக் கூடாது என்று தண்டனைவிதிக்கப்பட்டிருந்தது. ஆனால் வரும் திங்கள்கிழமை இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இந்தியாவில்நடைபெறவுள்ள டெஸ்ட்டில் ஷேவாக் இடம்பெறுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.
ஏற்கனவே தென்ஆப்ரிக்காவில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட்டில் ஷேவாக் இடம்பெறவில்லை. அதனால் இந்தடெஸ்ட்டில் அவர் இடம்பெறுவதில் தப்பில்லை என்று இந்தியத் தரப்பில் வாதம் செய்யப்பட்டது.
ஆனால் தென் ஆப்ரிக்காவில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்டை ஐ.சி.சி. ஒரு சர்வதேச போட்டியாகஅங்கீகரிக்காததால், ஷேவாக் இங்கிலாந்து டெஸ்ட்டில் இடம்பெறுவதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்கடுமையாக எதிர்த்தது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து மலேசியாவில் உள்ள ஐ.சி.சி. தலைவர் மால்கம் கிரே மற்றும் தலைமைஅதிகாரி மால்கம் ஸ்பீட் ஆகியோருடன், இந்தியக் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஜக்மோகன் டால்மியாபேச்சுவார்த்தை நடத்தினார்.
அதன் முடிவில், ஷேவாக் நாளை மறுநாள் மொஹாலியில் துவங்கவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான முதல்டெஸ்ட்டில் ஆடமாட்டார். இந்திய வீரர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனை குறித்து மறுபரிசீலனை செய்யப்படும்என்று உடன்பாடடு செய்யப்பட்டது.
இதுகுறித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் தாரிக் ஜியா கூறுகையில்,
இந்தியக் கிரிக்கெட் வாரியத்திற்கும், ஐ.சி.சி.க்கும் உள்ள பிரச்சனை சுமூகமாகத் தீர்க்கப்பட்டது குறித்து நாங்கள்மகிழ்ச்சியும், திருப்தியும் அடைகிறோம்.
இரு தரப்புகளுக்குமிடையில் இதுவரை நடைபெற்றுவந்த தேவையில்லாத அறிக்கைப் போர் முடிவுக்குவந்ததுகுறித்து, உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சியடைவார்கள். இதுபோன்ற பிரச்சனைஎதிர்காலத்தில் ஏற்படாது என்று நான் நம்புகிறேன்.
இந்திய வீரர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனை குறித்து விசாரிக்க ரெப்ரீகள் அடங்கிய கமிஷன் அமைக்கமுடிவெடுத்துள்ள ஐ.சி.சி.யின் முடிவை நான் வரவேற்கிறேன்.
மேலும் ரெப்ரீ இல்லாமல், முழு அதிகாரத்தையும் அம்பயர்களிடம் கொடுக்க வேண்டும் என்று கூறப்படுவதைநாங்கள் எதிர்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி












Click it and Unblock the Notifications