நாடாளுமன்றத்தை தகர்க்க திட்டமிட்ட பின் லேடன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி:

கடந்த செப்டம்பர் 11ம் தேதி அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தப்பட்டபோதே, நமது நாடாளுமன்றக் கட்டடத்தின்மீதும் தாக்குதல் நடத்த பின் லேடனின் அல்-காய்தா தீவிரவாத இயக்கத்தினர் திட்டமிட்டிருந்தனர் என்று உள்துறைஅமைச்சர் அத்வானி கூறினார்.

இதுகுறித்து இன்று(புதன்கிழமை) டெல்லியில் நிருபர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:

கடந்த சில நாட்களுக்கு முன் மும்பையில் ஒரு தீவிரவாதி கைது செய்யப்பட்டான். அவனிடம் போலீசார் நடத்தியவிசாரணையில், அவன் ஆஸ்திரேலியாவில் விமானப் பயிற்சி பெற்றுள்ளான் என்பது தெரிய வந்தது.

மேலும் அல்-காய்தா தீவிரவாதிகள் செப்டம்பர் 11ம் தேதியன்றே நமது நாடாளுமன்றக் கட்டடத்தைத் தகர்க்கவும்திட்டம் போட்டுள்ளனர். இதுதவிர, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் தாக்குதல் நடத்தஅல்-காய்தா திட்டமிட்டிருந்ததும் தெரிய வந்துள்ளது.

இதுதவிர மேலும் பல முக்கியத் தகவல்களையும் அவனிடமிருந்து போலீசார் கறந்துள்ளனர். ஆனால்அவற்றையெல்லாம் வெளியில் கூற இயலாது. இன்னும் அவனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்அத்வானி.

Mail this to a friend  Post your feedback  Print this page 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற