கொலை வழக்கில் கைதான கிருஷ்ணசாமிக்கு ஜாமீன்
சென்னை:
மாஞ்சோலை எஸ்டேட் சூபர்வைசர் கொலை வழக்கில் கைதாகியுள்ள புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்கிருஷ்ணசாமிக்கு இன்று (புதன்கிழமை) சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
மொத்தம் இரண்டு வழக்குகளில் கைது செய்யப்பட்டிருந்த கிருஷ்ணசாமிக்கு இரண்டிலும் ஜாமீன் கிடைத்துள்ளது.
கடந்த நவம்பர் 25ம் தேதி கைது செய்யப்பட்ட கிருஷ்ணசாமி தற்போது மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 1997ம் ஆண்டு பாளையங்கோட்டையைச் சேர்ந்த தலைமையாசிரியரைக் கொலை செய்த வழக்கில்கிருஷ்ணசாமிக்கு கடந்த 3ம் தேதி நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.
மாஞ்சோலை எஸ்டேட் சூபர்வைசர் கொலை வழக்கில் தனக்கு ஜாமீன் வேண்டும் என்று திருநெல்வேலி செசன்ஸ்நீதிமன்றத்தில் கிருஷ்ணசாமி மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அம்மனுவை விசாரித்த நீதிபதி பானுமதிஅவருக்கு ஜாமீன் வழங்கவில்லை.
அதனால் டாக்டர் கிருஷ்ணசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி கனகராஜ், டாக்டர் கிருஷ்ணசாமிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
இதற்கிடையே, மாஞ்சோலை வழக்குத் தொடர்பாக கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் உள்ள டாக்டர்கிருஷ்ணசாமிக்கு மேலும் 15 நாட்களுக்கு காவலை நீடித்து அம்பாசத்திரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


