எல்லையில் இந்திய-பாக் படைகள் சண்டை
ஜம்மூ:
இந்திய எல்லையில் தனது படைகளை பாகிஸ்தான் குவித்து வரும் நிலையில, காஷ்மீர் எல்லையில் பல இடங்களில்இந்தியப் படைகளும் பாகிஸ்தானியப் படைகளும் தீவிர துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டு வருகின்றன.
பூஞ்ச், ரஜெளரி ஆகிய இடங்களில் கனரக துப்பாக்கிகளால் இரு தரப்பினரும் மோதி வருகின்றனர்.
வழக்கமாக பனிக் காலத்தில் பாகிஸ்தான் படைகள் பயிற்சிக்காக இந்திய எல்லைப் பகுதியில் குவிக்கப்படுவதுவழக்கம். ஆனால், திட்டப்படி அவர்கள் கடந்த 9ம் தேதி எல்லையில் இருந்து கலைந்து சென்றிருக்க வேண்டும்.
ஆனால், படைகள் கலையவில்லை. தொடர்ந்து எல்லையிலேயே நிலை கொண்டுள்ளனர். டிசம்பர் 13ம் தேதிதாக்குதல் காரணமாக இந்தப் படைகள் எல்லையிலேயே தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதனால் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.



திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!