For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இன்று பொங்கல் பண்டிகை: தலைவர்கள் வாழ்த்து

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழகத்தில் இன்று (திங்கள்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

பொங்கல் பண்டிகையையொட்டி, பல்வேறு அரசியல் தலைவர்களும் தமிழர்களுக்கு வாழ்த்துக் கூறியுள்ளனர்.

ஜெயலலிதா:

"சுழன்றும் ஏர்ப்பின் அது உலகம்" என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கிற்கு ஏற்ப உலகிற்கே உணவளித்து நம்அனைவரையும் வாழவைக்கும் உழவுத் தொழிலைப் போற்றுகின்ற நன்னாளாம் பொங்கல் திருநாளையொட்டி,எனது அன்புக்குரிய தமிழக மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்களைத்தெரிவித்துக் கொள்கிறேன்.

"தை பிறந்தால் வழி பிறக்கும்" என்ற முதுமொழிக்கு ஏற்ப, தமிழக மக்களின் வாழ்பிலும் அனைத்து வளங்களும்கொழித்திட வேண்டும்.

எங்கும் அமைதி நிலவிட வேண்டும் என்ற எனது பொங்கல் நல்வாழ்த்துக்களை மீண்டும் ஒருமுறை தமிழக மக்கள்அனைவருக்கும் உரித்தாக்கிக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

கருணாநிதி:

தேள்கள் எனக் கணக்கின்றி கவலைகள் கொட்டியபோதும்
தேன் ஒரு துளியென இனிக்கும் சொல் இன்றைக்கும் பொங்கல் என்பது
உயிரை சாவில் நட்டு
உரிமைகளை வாழவைப்போம்
எனும் வீரம் கொள்வோம்
என்றே இப்பொங்கல் நாளை சூளுரையேற்க அழைக்கின்றேன்.

மறுபிறவியில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் தமிழினத்தின் மானத்திற்கு வீரத்திற்கு மறுபிறப்பு வேண்டுமெனமன்றாடுகிறேன். யாரிடம்? தமிழன், தமிழனிடம்தான் மன்றாடுகிறேன்.

என் கோரிக்கை நிறைவேறிட இந்தப் பொங்கல் இனிதே பொங்குக.

வைகோ:

பொங்கல் நன்னாளில் உலகெங்கும் வாழும் தமிழர் உள்ளங்களிலும் இல்லங்களிலும் உவகை பூத்திடவும், உற்சாகம்பொங்கிடவும் ஒளி என்றென்றும் தங்கிடவும் என் இதய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மட்டற்றமகிழ்ச்சி அடைகிறேன்.

கிருபாநிதி:

பலமுறை நம்மிடம் மோதி தோல்விகளையே பரிசாகப் பெற்ற நமது பகை நாடு நம்மிடம் மீண்டும் வாலாட்டுகிறது.

ஆனால் போராட்டத்தின் இறுதிக் கட்டத்தை நாம் அடைந்து விட்டோம். நமது பிரதமர் வாஜ்பாயின்வழிகாட்டுதலுடன் பயங்கரவாதத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் அழித்து ஒழிப்போம் என சூளுரைப்போம்.

ராமதாஸ்:

தைப் பொங்கல் திருநாள் தமிழர் புத்தாண்டின் துவக்கப் பெருநாள். அறிவு, அன்பு, உழைப்பு, பகுத்தறிவுபொங்கிடும் நிலையில் அனைவருக்கும் அனைத்தும் என்ற புதிய சமுதாயம் மலர அனைவரும் சூளுரைப்போம்.

அனைவருடைய உள்ளத்திலும் இல்லத்திலும் மகிழ்ச்சியும் செழிப்பும் பொங்கிட வாழ்த்துகிறேன்.

தமாகா தலைவர் ஜி.கே. வாசன், காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் உள்பட பல தலைவர்களும் பொங்கல்வாழ்த்துச் செய்திகளைத் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் பொங்கல் திருநாள் கொண்டாடப்படுவதைப்போல், வடநாட்டில் சங்கராந்தி என்ற பெயரில்கொண்டாடப்படுகிறது.

இதையடுத்து ஜனாதிபதி கே.ஆர். நாராயணன், பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகியோரும் பொங்கல்,சங்கராந்தி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X