For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விழுப்புரம் அரசு அலுவலகச் சுவர்களில் இருந்த திமுக விளம்பரங்களை அழித்த போலீசார்

By Staff
Google Oneindia Tamil News

விழுப்புரம்:

திமுக தலைவர் கருணாநிதியை வரவேற்பதற்காக, விழுப்புரம் அரசு அலுவலகச் சுவர்களில் எழுதப்பட்டிருந்தவிளம்பரங்களைப் போலீசார் இரவோடு இரவாக அழித்தனர்.

விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் இரு மகன்களின் திருமணம், கருணாநிதி தலைமையில் 20ம்தேதி நடைபெற உள்ளது. மு.க.ஸ்டாலின், முரசொலி மாறன் மற்றும் பல திமுக பிரமுகர்கள் இந்த திருமணத்தில்கலந்து கொள்கின்றனர்.

கருணாநிதியை வரவேற்கும் வகையில் நகரின் முக்கிய இடங்களில் சுவர் விளம்பரங்கள், போஸ்டர்கள், பேனர்கள்ஆகியவற்றை திமுகவினர் வைத்துள்ளனர். மேலும் நகராட்சி பயணியர் விடுதி, மின் நிலையம், போன்ற அரசுஅலுவலகச் சுவர்களிலும் விளம்பரங்கள் எழுதப்பட்டுள்ளன.

கடந்த புதன்கிழமை இரவோடு இரவாக அரசு கட்டடங்களின் சுவர்களில் இருந்த விளம்பரங்களை போலீசார்அழித்து விட்டனர். மேலும் பயணியர் விடுதி காவலர் ரங்கநாதன் கொடுத்த புகாரின் அடிப்படையில், அத்துமீறிசுவர் விளம்பரம் செய்ததாக திமுகவினர் மீது போலீசார் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

தகவல் அறிந்த பொன்முடி மறுநாள் (நேற்று) நிருபர்களை அழைத்து, அரசு சுவர்களில் அதிமுக உள்ளிட்ட பிறகட்சியினரின் விளம்பரங்கள் இருப்பதைக் காட்டி, திமுகவின் விளம்பரங்களை மட்டும் போலீசார் எப்படிஅழிக்கலாம் என்று கேட்டார்.

வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு முன் ஜெயலலிதா திருநாவலூரை அடுத்த பரிக்கல் ஆலயத்துக்கு வரக்கூடம்என்று கூறப்படுகிறது. அப்படி அவர் வரும்போது திமுகவினரின் விளம்பரம் அவரது கண்களில் பட்டுவிடக்கூடாதுஎன்பதற்காக அழித்தனரோ என்று சந்தேகமாக இருக்கிறது என்று பொன்முடி கூறினார்.

பின்னர் இது பற்றி போலீசாரிடம் தொலைபேசியில் பேசி கண்டனம் தெரிவித்தார். பிறகு திமுகவினரைச்சமாதானப்படுத்திய பொன்முடி, மீண்டும் விளம்பரத்தை எழுத கட்சியினரைக் கேட்டுக் கொண்டார்.

இது பற்றி காவல் துறை கண்காணிப்பாளர் அபய்சிங்கிடம் நிருபர்கள் கேட்டதற்கு, புகார்கள் வந்ததால்அனுமதியற்ற இடங்களில் எழுதப்பட்ட விளம்பரங்கள் அழிக்கப்பட்டன என்றார் அவர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X