For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இறந்த பிறகும் உறுப்புகளை தானம் செய்து 6 பேருக்கு மறுவாழ்வு தந்த 16 வயது மாணவன்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

16 வயது மாணவன் ஒருவனின் இதயம், கண்கள், நுரையீரல் மற்றும் சிறுநீரகம் ஆகியவை அவனுடையமரணத்துக்கு பிறகு 6 பேருக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது.

தன் மரணத்துக்குப் பிறகு 6 பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ள அந்த மாணவனின் பெயர் தியாகராஜன் (16). இவன்11ம் வகுப்பு மாணவன்.

சென்னை திருவொற்றியூர் ராஜாகடை ராமானுஜம் தெருவைச் சேர்ந்த மளிகைக் கடை வைத்திருக்கும்ரங்நாதன்-மாரியம்மாளின் மகன்தான் தியாகராஜன். இவனுக்கு சுருந்ததி (19) என்ற சகோதரியும் உண்டு.

கடந்த ஒரு வாரத்துக்கு முன் தியாகராஜனுக்கு தலைவலி ஏற்பட்டுள்ளது. தலைவலி அதிகமாகவே பக்கத்தில் உள்ளடாக்டரிடம் காண்பித்துள்ளனர்.

ஆனால் டாக்டர்கள் சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கும்போதே தியாகராஜனின் கைகளும் கால்களும்செயல்படாமல் போய்விட்டன.

இதனால் வறுமையில் உள்ள அவனது குடும்பத்தினர் பல இடங்களில் கடன் வாங்கி தியாகராஜனை சென்னைஅப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவனைப் பரிசோதித்தபோது மூளையில் ரத்தக் குழாய்வெடித்து இருப்பது தெரிய வந்தது.

ஆனால் டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் கோமா நிலைக்குப் போய் விட்டான். அவனது மூளை செயலிழந்துவிட்டதால், இனி பிரயோஜனமே இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்துவிட்டனர்.

சிறிது நேரத்திலேயே தியாகராஜன் இறந்து விட்டான். மகனை இழந்த பெற்றோர்கள், எனது மகன் வாழவேண்டும்,எப்படியாவது வாழ வையுங்கள் என்று கதறி அழுதனர்.

டாக்டர்களும், "நீங்கள் நினைத்தால் உங்கள் மகன் வேறு ஆள் மூலமாக இந்த உலகத்தில் வாழ முடியும், உங்கள்மகனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்குங்கள்" என்று கூறினர். இதற்கு தியாகராஜனின் பெற்றோர்கள்சம்மதித்தனர்.

இதைத்தொடர்ந்து டாக்டர்கள் வெங்கடாச்சலம், சிவக்குமார், ராதா ராஜகோபாலன் ஆகியோர் தலைமையிலானடாக்டர்கள் குழுவினர், தியாகராஜனின் உடலில் இருந்து இதயம், நுரையீரல், கண்கள், சிறுநீரகம் ஆகியவற்றைஆபரேஷன் செய்து தனியாக எடுத்தனர்.

பிறகு 2 கண்களும் சங்கர நேத்ராலயாவில் 2 பேருக்குப் பொருத்தப்பட்டதால், அவர்களுக்கு கண் பார்வைகிடைத்தது.

தியாகராஜனின் இதயமும் நுரையீரலும் மெட்ராஸ் மெடிக்கல் மிஷனில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தஇருவருக்கு பொருத்தப்பட்டன. இதனால் அவர்கள் இருவரும் பிழைத்துக் கொண்டனர்.

அதேபோல் 2 சிறுநீரகங்களும் அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள ஒரு சிறுநீரக நோயாளிக்கும் வேலூர்சி.எம்.சி. மருத்துவமனையில் உள்ள ஒரு பெண்ணுக்கும் பொருத்தப்பட்டன.

இது பற்றி அவனது தந்தை ரங்கனாதன் கூறுகையில், அவனுடைய இழப்பு ஈடு செய்ய முடியாதது. ஆனாலும்அவன் இறந்ததன் மூலம் 6 பேரை வாழ வைத்துள்ளான். அவன் ஆத்மா நிச்சயம் சாந்தி அடையும் என்று கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X