For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

அயோத்தி கர சேவகர்கள் பயணம் செய்த ரயில் எரிக்கப்பட்டதைக் கண்டித்து குஜராத்தில் பெரும் கலவரம் நடந்துவரும் நிலையில் நாடு முழுவதும் பந்த் நடத்த விஸ்வ ஹிந்து பரிஷத் அழைப்பு விடுத்துள்ளது.

இதனால் வட மாநிலங்களில் பெரும் அசாதாராண சூழ்நிலை நிலவுகிறது. குறிப்பாக குஜராத்திலும்மகாராஷ்டிரத்திலும் இந்த பந்த் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அகமதாபாத்தில் பல இடங்களில் முஸ்லீம்கள் வசிக்கும் பகுதிகளை குறி வைத்துத் தாக்குல் நடக்கஆரம்பித்துள்ளது. இரு சமுதாயத்தினரும் தெருக்களில் நேரடி மோதலில் இறங்கியுள்ளனர்.

பெட்ரோல் குண்டுகளும், எரியும் டயர்களும் வீடுகளின் மீது எரியப்பட்டு வருகின்றன.

பந்தையடுத்து இந்தியா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அனைதது மதத் தலைவர்களுடன் டெல்லிபோலீசார் இன்று காலை ஆலோசனை நடத்தினர். தங்கள் மதத்தினரை அமைதியாக இருக்கச் செய்து உதவுமாறுகேட்டுக் கொண்டனர்.

டெல்லி ஜூம்மா மசூதியின் தலைவர் ஷாகி இமாம் நேற்றிரவு பிரதமர் வாஜ்பாயைச் சந்தித்துப் பேசினார். இன்றுவெள்ளிக்கிழமை தொழுகை வழக்கம் போல் நடக்கும் என அறிவித்துள்ளார்.

குஜராத்தில் வதோதரா நகரில் பெரும் வன்முறை நடந்து வருகிறது. நேற்றிரவில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

மும்பையில்...

மும்பையில் சிவசேனை ஆதரவுடன் இந்த பந்த் நடந்து வருகிறது. ரயில் தண்டவாளங்களில் நின்று வன்முறைக்கும்பல் போராடி வருவதால் சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பாதுகாப்புக் கருதி 90 சதவீத அலுவலக ஊழியர்கள் பணிக்குச் செல்லவில்லை. இதனால் மாநிலம் ஸ்தம்பித்துப்போய் உள்ளது.

ஆனால், இதுவரை எந்த அசம்பாவித சம்பவங்களுடம் நடக்கவில்லை. தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில்இந்த பந்துக்கு எந்த ஆதரவும் இல்லை.

அதே போல வட கிழக்கு மாநிலங்களிலும் மேற்கு வங்கத்திலும் அமைதி நிலவுகிறது.

குஜராத்தில் தான் வன்முறைத் தாண்டவமாடி வருகிறது. அந்த மாநிலத்துக்கு 13 கம்பெனி ராணுவப் படையினர்வந்திறங்கியுள்ளனர்.

நாடு முழுவதும் ரயில்களுக்கும், ரயில் நிலையங்களுக்கும் மிக பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.தண்டவாளங்களைத் தீவிரமாகக் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் நிதிஷ் குமார்கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X