மதுரை அருகே வேன் கவிழ்ந்து 3 பேர் பலி: 26 பேர் படுகாயம்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை அருகே வேன் தலைக்குப்புற கவிழ்ந்ததில் 3 பேர் இறந்தனர். மேலும் 26 பேர் படுகாயமடைந்தனர்.
மதுரையையடுத்த வெள்ளரிப்பட்டி கிராமத்தில் இந்தச் சம்பவம் நடந்தது. இந்த கிராமத்தின் அருகே ஒருகிராமத்தில் நடந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு வெள்ளிக்கிழமை இரவு இவர்கள் ஒரு வேனில்ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது ஒரு குறுகலான சாலை வளைவில் டிரைவர் தனது கட்டுப்பாட்டை இழந்தார். இதையடுத்து தாறுமாறாகஓடிய அந்த வேன் பயங்கர வேகத்தில் கவிழ்ந்தது. இதில் 65 வயது முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் இருவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தனர். இந்த விபத்தில் காயமடைந்த 26 பேர் மதுரைஅரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications