குஜராத் வன்முறையை கண்டித்து நெல்லையில் ஸ்டிரைக்
மேலப்பாளையம்:
குஜராத்தில் நடைபெற்று வரும் வன்முறைச் சம்பவங்களை கண்டித்து, நேற்று மேலப்பாளையத்தில் ஒரு நாள் கடை அடைப்புநடைபெற்றது.
நெல்லை மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களில் ஒன்று மேலப்பாளையம். நெல்லை மாவட்ட மத நல்லிணக்க நடவடிக்கைகுழு விடுத்திருந்த வேண்டுகோளை ஏற்று, மேலப்பாளையத்தில் உள்ள வர்த்தகர் சங்கம், வியாபாரிகள் சங்கம், ஜமாத்துகள்கூட்டமைப்பு ஆகியவை நேற்று ஒரு நாள் முழுவதும் கடை அடைப்பு போராட்டம் நடத்தின.
குஜராத் மாநிலத்தில் இரண்டு மாதங்களுக்குள் மேலாக நடைபெற்று வரும் வண்முறைகளை கண்டித்தும் குற்றவாளிகள் மீதுபாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க கோரியும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை நீக்க கோரியும் பாதிக்கப்பட்ட மக்களுக்குநிவாரணங்கள் வழங்கக்கோரியும் மக்களின் பாதுகாப்புக்கு மத்திய அரசு உத்திரவாதம் வழங்கக் கோரியும் நடவடிக்கைகள்எடுக்கும்படி வலியுறுத்தி இந்த கடை அடைப்பு நடந்தது
இந்த கடை அடைப்பு காரணமாக, எப்போதும் மக்கள் நடமாட்டம் கலகலப்பாக இருக்கும் பகுதிகள் கூட வெறிச்சோடிக் கிடந்தன.எனினும் பேருந்துகள், ஆட்டோக்கள், லாரிகள் போன்றவை வழக்கம் போல் ஓடின. சில பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கூட ஒருநாள் தள்ளிப் போனது.
கடை அடைப்பு நடத்தியவர்கள், மீன் மார்க்கெட் அருகே உள்ள ஏ.கே.எம்.கல்யாண மஹாலில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.கண்டன ஊர்வலமும் நடந்தது.
குஜராத்தில் மெல்ல அமைதி திரும்பிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications