For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பலத்தைக் காட்ட காத்திருக்கிறோம்: விமானப் படை

By Staff
Google Oneindia Tamil News

புனே:

பாகிஸ்தானிடம் இருந்து வரும் எந்தச் சவாலையும் சந்திக்க இந்திய விமானப் படை தயாராக இருப்பதாக அதன்தலைவர் ஏர் சீப் மார்ஷல் கிருஷ்ணசாமி கூறினார்.

புனேயில் தேசிய பாதுகாப்பு அகாடமியில் பேசிய அவர், இந்தியாவின் முப்படைகளும் தயார் நிலையில் உள்ளன.விமானப் படையைப் பொறுத்தவரை என்ஜின்கள் ஸ்டார்ட் செய்யப்பட்டு தயார் நிலைக்கு வந்துவிட்டோம். கியரைபோட்டுக் கொண்டு புறப்பட வேண்டியது தான் மிச்சம்.

முஷாரப் என்னென்னவோ பேசுகிறார். அவர் அப்படி பேசித் தான் ஆக வேண்டும். அவர் இருக்கும் நிலை அப்படி.தன்னைத் தானே ஜனாதிபதியாக்கிக் கொண்ட அவர் மக்களை குளிர்விக்கும் வகையில் பேசித் தானே ஆகவேண்டும். அவரது பேச்சுக்கும் உண்மை நிலவரத்துக்கும் இடையே பல மைல் தூரம் இருப்பதை அவரே மறுக்கமாட்டார்.

இந்தியா மீது அணு குண்டு போடுவேன் என்கிறார். இந்தியாவை தவிடுபொடியாக்குவேன் என்கிறார். ஒருஅரசியல்வாதியின் பேச்சு இது. அவரால் எதைச் செய்ய முடியும் என்பது அவரை விட நமக்கு நன்றாகத் தெரியும்.

குறைந்த கால அவகாசத்தில் தயாராகும் படை இந்தியப் படை. எதையும் சந்திக்கத் தயாராகக் காத்திருக்கிறோம்.சாத்தானை ஒட்டுமொத்தமாக அழித்துவிடக் காத்திருக்கிறோம்.

நமது பலத்தை, இந்தியாவின் மகத்துவத்தை உலகுக்கு உணர்த்த சந்தர்ப்பத்திற்காகக் காத்திருக்கிறோம்.முப்படைகளும் இதற்கு முன் இப்படி ஒரு தயார் நிலைக்கு வந்ததில்லை. இப்படி இணைந்து செயல்பட்டதும்இல்லை.

வான வேடிக்கை: மார்ஷல் கிண்டல்:

நமது முப்படையின் வீரர்களும் வெவ்வேறு வண்ணங்களில் உடை அணிந்தாலும் உணர்வு ஒன்று தான். இலக்குஒன்று தான். எதிரியை ஒழித்துக் கட்டுவது தான் எங்கள் நோக்கம்.

ஏவுகணைகளை விட்டு நம்மை மிரட்டிவிட பாகிஸ்தான் நினைக்கிறது. அந்த ஏவுகணைச் சோதனைகளை வானவேடிக்கைகளாகத் தான் இந்தியா கருதுகிறது. அவர்களது ஏவுகணை.. அவர்கள் பற்ற வைத்து விண்ணில்விடுகிறார்கள். வேண்டுமானால் கை தட்டி இந்த வான வேடிக்கையை ரசிப்போம்.

அவர்கள் தீபாவளி கொண்டாட நினைத்தால் அதை நாம் ஏன் தடுக்க வேண்டும் என்றார் கிருஷ்ணசாமி.

வாஜ்பாய்- சீன அதிபர் சந்திப்பு:

அடுத்த மாதம் கஜாகிஸ்தானில் நடக்கவுள்ள மாநாட்டின்போது சீன அதிபர் ஜியாங் ஜெமினை பிரதமர் வாஜ்பாய்சந்தித்துப் பேசவுள்ளார். எல்லை நிலவரம் குறித்து இருவரும் விவாதிப்பார்கள் என்று தெரிகிறது.

பாகிஸ்தானின் நெருங்கிய நட்பு நாடு சீனா. ஆனால், இம்முறை எந்த நாட்டுக்கும் ஆதரவான நிலையை எடுக்கப்போவதில்லை என்று சீனா தெளிவுபடுத்திவிட்டது.

உடனே போர் வராது:

இதற்கிடையே இப்போது சிங்கப்பூரில் உள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் உடனடியாகஇந்தியா- பாகிஸ்தான் போர் மூள வாய்ப்பில்லை என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X