ஏழைகளுக்கு இலசவ இருதய அறுவை சிகிச்சை: ஜெ. புதிய திட்டம்
சென்னை:
தமிழகத்தைச் சேர்ந்த ஏழை, எளியவர்களுக்கு இலவச இருதய அறுவைச் சிகிச்சை செய்யும் இதயம் காப்போம் என்ற புதிய திட்டத்தைஅதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.
இத் திட்டத்தை தொடங்கி வைத்து ஜெயலலிதா பேசுகையில், தமிழகத்தில் இருதய நோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யவேண்டிய கட்டாயம் இருந்தும் பணம் இல்லாமல் சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் சிரமத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களுக்கு அரசு மருத்துவமனைகள் மூலமாக மட்டும் உதவி செய்துவிட முடியாது. இதையடுத்துத் தான் எம்.ஜி.ஆர். அறக்கட்டளையின்சார்பில் இந்த முயற்சியை எடுத்துள்ளோம்.
தமிழகத்தில் உள்ள 385 ஒன்றியங்களிலிருந்தும் தலா ஒரு நோயாளி தேர்வு செய்யப்பட்டு, 385 நோயாளிகளுக்கும் இலவசமாக இருதயபைபாஸ் அறுவைச் சிகிச்சை செய்யப்படும்.
பிரபல இருதய சிகிச்சை நிபுணர்களான டாக்டக் குரியன், டாக்டர் பக்தவச்சலம், டாக்டர் கிரநாத், டாக்டர்சத்யமூர்த்தி மற்றும் பலர் இந்த அறுவை சிகிச்சைகளை இலவசமாகவே செய்ய முன் வந்துள்ளனர்.
ஒவ்வொரு நோயாளிக்கும் மருந்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் வாங்க ரூ. 35,000 தேவைப்படும். இந்தச் செலவை எம்.ஜி.ஆர்.அறக்கட்டளையும் அதிமுகவும் ஏற்கும்.
இந்த ஆண்டு மட்டும் ஏழைகளின் இருதய அறுவை சிகிச்சைக்காக ரூ. 1.35 கோடி செலவிடப்படும்.
தமிழகத்தின் தலை சிறந்த தனியார் மருத்துவமனைகளில் இந்த அறுவை சிகிச்சைகள் செய்யப்படும். அறுவை சிகிச்சை செய்யப்படவேண்டிய நோயாளிகள் அவர்களின் நோயின் தீவிரத்தைப் பொறுத்து தேர்வு செய்யப்படுவார்கள். இதற்காக ஒரு குழுவும்அமைக்கப்படும். இதில் ஓய்வு பெற்ற நீதிபதி, ஒரு சமூக சேவகர், ஒரு அதிமுக நிர்வாகி ஆகியோர் இடம் பெறுவர்.
வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள, ஏழை, எளிய மக்களுக்கு இந்தத் திட்டம் பொருந்தும். இந்த ஆண்டிலிருந்து இனி ஒவ்வொரு ஆண்டும்த் திட்டம் செயல்படும் என்றார்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications