For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆயிரக்கணக்கான போலீசாரிடம் தனித்தனியே குறை கேட்ட ஜெ.

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

இந்தியாவில் முதல்முறையாக போலீசாரிடம் முதல்வர் குறை கேட்கும் நிகழ்ச்சி தமிழகத்தில் நடந்தது.

சென்னையில் தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் இன்று நடந்த இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுஜெயலலிதாவிடம் குறைகளைக் கூற ஆயிரக்கணக்கான போலீசார் குவிந்தனர். பலர் தங்களின் குடும்பத்தினரையும்அழைத்து வந்திருந்தனர்.

ஊதிய உயர்வு இல்லை, சிறுநீரகக் கோளாறு, குழந்தைகளின் படிப்புக்கு உதவி, இடமாற்றம் என பல தரப்பட்டகோரிக்கைகள் இன்று ஜெயலலிதாவிடம் போலீசாரால் முன் வைக்கப்பட்டன. மாவட்ட எஸ்.பியில் இருந்து கடைநிலை காவலர் வரை அனைத்துத் தரப்பு காவல்துறையினரும் இன்று ஜெயலலிதாவைச் சந்தித்தனர்.

மூன்று கட்டமாக இந்த குறைகேட்பு நிகழ்ச்சி நடக்கிறது. இன்று தென் மாவட்டங்களான மதுரை, திண்டுக்கல்,சிவகங்கை, விருதுநகர், கன்னியாகுமரி உள்பட பல மாவட்ட போலீசார் சென்னை வந்து முதல்வரைச் சந்திக்கலாம்என அறிவிக்கப்பட்டிருந்தது. அதிகபட்சமாக 500 பேர் வரை வருவர் என்று கருதப்பட்டு அதற்கான ஏற்பாடுகள்செய்யப்பட்டிருந்தன.

ஆனால், இன்று தென் மாவட்டங்களிலிருந்து 1,622 போலீசார் இன்று சென்னையில் குவிந்துவிட்டனர். அவர்கள்அனைவரையும் ஜெயலலிதா தனித்தனியாக சந்தித்துப் பேசினார்.

தனது அறைக்குள் அவர்களை அழைத்து அமரச் செய்து கோரிக்கை மனுவை வாங்கிக் கொண்டு அவர்களிடம்தனிப்பட்ட முறையில் முதல்வர் பேசினார்.

போலீசார் தவிர தீயணைப்புத்துறை காவலர்கள் மற்றும் சிறைத்துறைக் காவலர்கள் ஆகியோரிடமும் ஜெயலலிதாஇன்று குறைகளைக் கேட்டார். பெண் காவலர்களும் ஏராளமான அளவில் வந்து தங்கள் குறைகளைச்சொன்னார்கள்.

ஒரு இன்ஸ்பெக்டர் ஜெயலலிதாவிடம் பேசுகையில், இன்னும் 2 மாதத்தில் நான் ஓய்வு பெற இருக்கிறேன். கடந்தஇரண்டு ஆண்டுகளாக ஒரு பைசா கூட எனது வருமானம் உயரவில்லை என அவர் கூறினார்.

மதுரையைச் சேர்ந்த காவலர் ஒருவர் ஜெயலலிதாவிடம் கூறுகையில், நான் கடந்த பல வருடங்களாக இருசிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகிறேன். 170 முறை டயாலிசிஸ் செய்துள்ளேன். என்னால்பொருளாதாரரீதியில் இதை சமாளிக்க முடியவில்லை. எனக்கு உதவ வேண்டும் என்றார்.

இந்தக் குறைகளைக் கேட்ட ஜெயலலிதா உடனடியாக உள்துறை செயலாளர் மற்றும் அதிகாரிகளுடன் அங்கேயேவைத்து ஆலோசனையும் நடத்தினார். மிக விரைவாக எல்லாருடைய குறைகளும் களையப்படும் எனஉறுதியளித்தார்.

முன்னதாக குறை சொல்ல வந்திருந்த போலீசாரிடையே பேசிய ஜெயலலிதா, தமிழகப் போலீசார் அனைவரும்தியாக மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டும். ஏராளமான நிதி நெருக்கடிகளுக்கிடையிலும் கடந்த ஒருஆண்டில் தமிழக போலீசாருக்கும் சிறைக் காவலர்களுக்கும் தீயணைப்புத்துறை வீரர்களுக்கும் ஏராளமானசலுகைகளை எனது அரசு வழங்கியுள்ளது.

இந்தியாவிலேயே இதுவரை எந்த மாநில முதல்வரும் இது போல் போலீசாரைத் தனித் தனியாகச் சந்தித்துகுறைகளைக் கேட்டதில்லை என்றார்.

இந்நிலையில் தமிழகத்தின் பிற பகுதிகளைச் சேர்ந்த போலீசாரிடமும் குறைகளைக் கேட்க ஜெயலலிதா முடிவுசெய்துள்ளார்.

மேற்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்களிடம் ஆகஸ்டு 2ம் தேதியன்றும், மத்திய மண்டலத்தைச் சேர்ந்தவர்களிடம்ஆகஸ்டு 5ம் தேதியன்றும், சென்னை மாநகரைச் சேர்ந்த போலீசாரிடம் ஆகஸ்டு 7ம் தேதியன்றும் ஜெயலலிதாமனுக்களைப் பெற்றுக் கொண்டு அவர்களுடைய குறைகளையும் கேட்டறிவார்.

தமிழகத்தில் போலீஸ் சங்கம் வைப்பதற்கு அனுமதி அளிக்கப் போவதில்லை என்று சமீபத்தில் தான் தமிழக அரசுஅறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந் நிலையில் இந்தக் குறைகேட்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X