For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாளை மதுரையில் காங்கிரஸ்-தமாகா இணைப்பு விழா

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

காங்கிரசுடன் தமாகா இணையும் விழா தான் தமிழகத்தில் காமராஜர் ஆட்சிக்கான அடிக்கல் நாட்டு விழா என்றுதமாகா தலைவர் ஜி.கே. வாசன் கூறினார்.

காங்கிரஸ்-தமாகா இணைப்பு விழா நாளை மதுரையில் சோனியா காந்தி முன்னிலையில் நடைபெறவுள்ளது. இந்தஇணைப்பு விழாவுக்கு வருமாறு தொண்டர்களுக்கு வாசன் வெளியிட்டுள்ள செய்தியில்,

எளிமையும் நேர்மையும் தமிழக நலன் சார்ந்த கண்ணோட்டமும் கொண்ட காமராஜர் ஆடசியை மீண்டும்கோட்டையில் கொலுவிருக்கச் செய்வதற்காகவே காங்கிரசுடன் தமாகா இணைகிறது.

தமிழக அரசியல் வரலாற்றில் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தவிருக்கும் இந்த இணைப்பு விழா மாநாட்டில்பங்கேற்று மூப்பனாரின் கனவை நனவாக்கும் உயரிய நோக்குடன் தொண்டர்கள் மதுரையில் ஆர்வத்துடன்கூடுங்கள்.

நேர்மை, தூய்மை, வாய்மை, எளிமை நிறைந்த காந்தியப் பண்புகளைப் பொதுவாழ்வில் நிலைநிறுத்தவும்ஜனநாயகத்தைக் காக்கவும் மதச்சார்பின்மைக்கு மகுடம் சூட்டவும் தமாகா தொண்டர்களாகிய நடத்தும்ஆரோக்கியமான அரசியல் வேள்வியின் தொடக்கமே இந்த இணைப்பு விழா.

சோனியா பங்கேற்கும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இணைப்பு விழா இதுவரை மாநிலம் காணாத மாபெரும்தேசியத் திருவிழாவாக நடந்தேற வேண்டும்.

எதைப் போட்டு எதைப் பெறலாம் என்ற மலிவான வணிக நோக்கம் வளர்ந்திருக்கும் இன்றைய அரசியல்சூழ்நிலையில் நாட்டு நலனுக்காக எள்ளளவும் எதிர்பார்ப்பு இல்லாமல் கைம்மாறு கருதாமல் சுயநலம் தேடாமல்சோனியாவின் ஆற்றல் மிக்க தலைமையின் கீழ் காங்கிரஸ் பேரியக்கத்தில் தமாகா சங்கமிக்கிறது.

வெள்ளத்தோடு வெள்ளம் கலப்பது போல் தேசிய உள்ளங்கள் இரண்டறக் கலக்கும் இணைப்புத் திருவிழாவைப்பார்த்துப் பரவசம் அடையவும் வாழ்த்தி நெஞ்சம் மகிழவும் நாளை மதுரைக்கு வருக என்று அந்தச் செய்தியில்வாசன் கூறியுள்ளார்.

இதற்கிடையே மதுரை-சிவகங்கை சாலையில் உள்ள பாண்டிகோவிலுக்கு அடுத்துள்ள மைதானத்தில் இணைப்புவிழாவுக்கான பணிகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன.

நாளை காலை காங்கிரசுடன் பாண்டிச்சேரி தமாகா இணைக்கும் விழாவை முடித்து விட்டு மாலை 3.30மணியளவில் சோனியா காந்தி மதுரை வரவுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X