புலிகள் மீதான தடை நீக்கம் உறுதி: இலங்கை அமைச்சர்

Posted By: Super
Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கம் தற்காலிகமானது அல்ல என்று இலங்கை அரசியல் சாசன விவகாரத்துறைஅமைச்சர் பெய்ரிஸ் கூறினார்.

இன்று அவர் நிருபர்களிடம் பேசுகையில்,

செப்டம்பர் 6ம் தேதி நீக்கப்படவுள்ள புலிகளின் மீதான தடை தற்காலிகமானது தான் என்று இலங்கை அரசுக்குச்சொந்தமான "ரூபவாஹினி" தொலைக்காட்சி தெரிவித்தது.

மேலும் பேச்சுவார்த்தையை திடீரென்று புலிகள் முறித்துக் கொண்டால் அவர்கள் மீதான தடை மீண்டும்உடனடியாக அமல்படுத்தப்படும் என்று அந்தத் தொலைக்காட்சியில் கூறப்பட்டது.

இந்த இரண்டு தகவல்களும் தவறானவை. இலங்கை அரசு இது போன்று தெரிவிக்கவே இல்லை.

புலிகள் மீதான தடை நீக்கம் தற்காலிகமானது அல்ல என்பதை உறுதியாக என்னால் கூற முடியும். ஆனாலும்மிகவும் அவசியம் தேவைப்பட்டால் அதை மறுபரிசீலனை செய்ய இலங்கை அரசுக்கு முழு உரிமையும் உண்டுஎன்பதையும் கூறிக் கொள்கிறேன்.

அரசு ஏற்கனவே கூறியது போல் பேச்சுவார்த்தைக்கு 10 நாட்களுக்கு முன்பாகவே (அதாவது செப்டம்பர் 6ம் தேதி)புலிகள் மீதான தடை விலக்கிக் கொள்ளப்படும்.

பேச்சுவார்த்தைக்கான வழிமுறைகள் குறித்து நார்வே ஆலோசகரான எரிக் சோல்ஹைமுடன் பேச்சுநடத்தியுள்ளேன். இதற்கான அனைத்து முயற்சிகளையும் நார்வே தூதுக் குழுவினரே கவனித்துக் கொள்கின்றனர்என்றார் பெய்ரிஸ்.

வரும் செப்டம்பர் 6ம் தேதி இதற்கான முறையான அறிவிப்பு இலங்கை அரசால் வெளியிடப்படவுள்ளது.

செப்டம்பர் 16ம் தேதி முதல் 18ம் தேதி வரை முதற்கட்ட பேச்சுவார்த்தை நடக்கவுள்ளது.

கடந்த 18 ஆண்டுகளாக நடந்த போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கு இலங்கையில்மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்வது குறித்து இந்த முதற்கட்டப் பேச்சுவார்த்தையின் போதுஆலோசிக்கப்படவுள்ளது.

இதைத் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் இருமுறை பேச்சுவார்த்தையை நடத்த நார்வே குழுவினர்திட்டமிட்டுள்ளனர்.

பேச்சுவார்த்தைக்கு புலிகளின் அரசியல் ஆலோசகரான ஆன்டன் பாலசிங்கம் தலைமையில் நான்கு பேர் கொண்டகுழு ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்ட போதிலும், அரசு சார்பாக இன்னும் யாருடைய பெயரும்அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Mail this to a friend  Post your feedback  Print this page 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற