திருச்செந்தூர் நீதிமன்றத்தில் நாளை நெடுமாறன் மீண்டும் ஆஜர்
கடலூர்:
பொடா சட்டத்தின் கீழ் கைதாகி கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் நாளை திருச்செந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
கடந்த 1992ம் ஆண்டு திருச்செந்தூரில் நடந்த ஒரு கூட்டத்தில் புலிகளை ஆதரித்துப் பேசியதாக நெடுமாறன் மீது1994ல் வழக்கு பதிவு செய்யப்பட்டு பின்னர் 1997ல் அவர் மீது குற்றப் பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் இவ்வழக்கு தொடர்பாக நெடுமாறன் ஆஜராகவில்லை என்று கூறப்பட்டதைத் தொடர்ந்து திருச்செந்தூர்நீதிமன்றம் சமீபத்தில் அவருக்கு "பிடிவாரண்ட்" பிறப்பித்தது.
இதையடுத்து கடந்த 2ம் தேதி திருச்செந்தூர் நீதிமன்றத்தில் நெடுமாறன் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போதுசெப்டம்பர் 5ம் தேதி மீண்டும் அவர் ஆஜராக வேண்டுமென்று திருச்செந்தூர் நீதிமன்ற நீதிபதி பால்துரைஉத்தரவிட்டார்.
ஆனால் அன்று நெடுமாறனின் உடல் நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டதால் அவரால் நீதிமன்றத்தில் ஆஜராகமுடியவில்லை. இதையடுத்து வரும் 12ம் தேதி அவர் மீண்டும் ஆஜராக வேண்டுமென்று நீதிபதி பால்துரைஉத்தரவிட்டார்.
அதன்படி கடலூர் சிறையில் வைக்கப்பட்டிருந்த நெடுமாறன் இன்று காலை பாளையங்கோட்டை சிறைக்குக்கொண்டு செல்லப்பட்டார்.
இன்று இரவு பாளைங்கோட்டை சிறையில் தங்க வைக்கப்படும் நெடுமாறன், நாளை காலை திருச்செந்தூர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
பின்னர் மீண்டும் நாளையே அவர் கடலூர் சிறைக்குக் கொண்டு செல்லப்படுகிறார்.
-->












Click it and Unblock the Notifications