For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வீரப்பனுடன் 50 பேர்?: தமிழர் விடுதலை படை தீவிரவாதி பரபரப்பு வாக்குமூலம்

By Staff
Google Oneindia Tamil News

ஈரோடு:

காட்டுக்குள் சந்தனக் கடத்தல் வீரப்பனுடன் 50க்கும் மேற்பட்ட தமிழர் விடுதலை படையைச் சேர்ந்தவர்கள்இருப்பதாக அரியலூரில் கைது செய்யப்பட்ட அந்த அமைப்பைச் சேர்ந்த சீதாராமன் பரபரப்பு வாக்குமூலம்அளித்துள்ளார்.

அரியலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் டாக்சி டிரைவர்களைக் கடத்தி அவர்களைக் கொன்று, முந்திரிக்காடுகளில் புதைத்து, டாக்சிகளைத் திருடி வந்த சீதாராமனை சமீபத்தில் போலீஸார் கைது செய்தனர். இதுவரை 3டிரைவர்களின் உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.

சீதாராமனுக்கும் வீரப்பனுக்கும் தொடர்பு உள்ளதாக போலீசார் கூறுகின்றனர். தற்போது வீரப்பன் குறித்துசீதாராமன் பரபரப்பான வாக்குமூலம் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து போலீஸ் தரப்பில்கூறப்படுவதாவது:

சீதாராமன் வாக்குமூலத்தின்படி வீரப்பனுடன் தற்போது 50க்கும் மேற்பட்ட தமிழர் விடுதலைப் படை தீவிரவாதிகள்இருப்பதாகத் தெரிகிறது. அத்தனை பேரும் ஆட்களைக் கடத்துவதிலும், குறி தவறாமல் சுடுவதிலும் வல்லவர்கள்.இவர்கள் அனைவரும் 20 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள்.

இளமங்கலம் மாத்து என்பவன் வெடிகுண்டுகள் தயாப்பதில் கை தேர்ந்தவனாம். உயிரைப் பொருட்படுத்தாமல்சொன்னதை செய்யும் இளைஞர்கள் தான் வீரப்பனுடன் இருப்பதாகவும், வீரப்பனைப் பிடிப்பது கண்டிப்பாகமுடியாத காரியம் என்றும் போலீஸாடம் சீதாராமன் வாக்குமூலம் அளித்துள்ளதாகத் தெரிகிறது.

வீரப்பனுக்கும், சில அரசியல்வாதிகளுக்கும் இன்னும் நல்ல தொடர்பு இருப்பதாகவும், அவர்கள் மூலமாகவேவீரப்பன் இன்னும் பல்வேறு பரிவர்த்தனைகளை மேற்கொண்டிருப்பதாகவும் சீதாராமன் கூறியிருப்பதாகத்தெரிகிறது.

வீரப்பனுடன் 2 பேர் மட்டுமே இருப்பதாக சமீபத்தில் கர்நாடக ஐ.ஜி. கெம்பையா கூறியிருந்தார். இந்த நிலையில்அவனுடன் 50க்கும் மேற்பட்ட அபாயகரமான கும்பல் இருப்பதாக சீதாராமன் கூறியிருப்பது பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் வார இதழ் ஒன்றுக்கு தலைமறைவாக இருந்த வண்ணம் பேட்டி தந்த தமிழர் விடுதலை இயக்கத்தின்தலைவர் இளவரசனும் கூட வீரப்பனுடன் சேர்ந்து செயல்பட்டு வருவதாகக் கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X