இளங்கோவன் மீது அதிமுகவினர் செருப்பு வீச்சு

Subscribe to Oneindia Tamil

தேனி:

உத்தமபாளையத்தில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன் மீது கற்கள்மற்றும் செருப்புகள் வீசப்பட்டன. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் நடைபெறும் உள்ளாட்சித் தலைவர் இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிபோட்டியிடுகிறது. இதில் போட்டியிடும் வேட்பாளருக்குஆதரவாக இளங்கோவன் பிரசாரம் செய்தார்.

கோட்டை மேடு என்ற இடத்தில் ஜீப்பில் இருந்தபடி அவர் பேசிக் கொண்டிருந்தார். தமிழக அரசின் செயல்பாடுகள்குறித்து அவர் விமர்சித்துப் பேசிக் கொண்டிருக்கையில் திடீரென்று சிலர் அவர் மீது கற்களையும்,செருப்புகளையும் வீசினர். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.

ஆனால் அவை இளங்கோவன் மீது படவில்லை. இதை கொஞ்சம் கூடப் பொருட்படுத்தாமல் இளங்கோவன்தொடர்ந்து பேசினார். இந்தத் தாக்குதலுக்குப் பின்னர் அதிமுகவை மேலும் கடுமையாகத் தாக்கி அவர் பேசினார்.

பெரியகுளம் அதிமுக எம்.பியும் சசிகலாவின் அக்காள் மகனுமான தினகரனின் தூண்டுதலில்தான் இந்த கல்வீச்சுநடந்ததாகவும், அவரது அந்தரங்கம் குறித்து விரைவில் விவரங்களை வெளியிடுவேன் என்றும் ஆவேசமாகபேசினார் இளங்கோவன்.

இத் தாக்குதலுக்ருப் பின் காங்கிரஸ் தொண்டர்கள் அவரைச் சூழ்ந்து நின்று கொண்டனர்.

ஆனாலும் தொடர்ந்து அதிமுகவினர் தாக்குதல் நடத்தவே போலீசாரை நோக்கிப் பேசிய இளங்கோவன், அந்த அடாவடி கும்பலை நீங்கள்விரட்டுகிறீர்களா, அல்லது நாங்கள் பதில் தாக்குதல் நடத்த வேண்டுமா என்று கேட்டார்.

இதையடுத்து அதிமுகவினரை போலீசார் தடியடி நடத்திக் கலைத்தனர்,

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+