For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாளை நெய்வேலி போராட்டம்: போலீசார் குவிப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழ்த் திரையுலகினர் நாளை நெய்வேலியில் நடத்தவுள்ள போராட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாகியுள்ளன.பாதுகாப்புப் பணிக்காக 5,000 போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையிலிருந்து நாளை அதிகாலை 125 ஆம்னி பஸ்களில் திரையுலகினர் புறப்பட்டு செல்கிறார்கள். இதில் 100பஸ்களில் துணை நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்டோர் செல்கிறார்கள். நடிகர்கள், நடிகைகள்,இயக்குநர்கள்,தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர் 25 பஸ்களில் செல்கிறார்கள்.

நடிகர்கள், நடிகைகள் செல்லும் பஸ்கள் நாளை காலை 6 மணிக்கு சென்னையிலுள்ள நடிகர் சங்கத்திலிருந்துகிளம்பி கிழக்குக் கடற்கரை சாலை வழியாக முதலில் பாண்டிச்சேரி சென்று பின்னர் அங்கிருந்து கடலூர் வழியாகநேராக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு செல்கின்றன. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மற்ற 100 பஸ்களும் நாளை காலை 6 மணிக்கே கிளம்புகின்றன. ஆனால் இவை வழக்கமான நேர் பாதையிலேயேநெய்வேலி சென்று சேருகின்றன.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உள்ள விடுதியில் 40 அறைகள் நடிகர்கள், நடிகைகளுக்காகஒதுக்கப்பட்டுள்ளன. அங்கு காலை சாப்பாட்டை முடித்துக் கொண்டு அனைவரும் கிளம்பி நெய்வேலி வடக்குத்துஎன்ற இடத்திற்கு வந்து சேருகிறார்கள்.

பின்னர் அங்கு ஏற்கனவே வந்து சேர்ந்துள்ள துணை நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுடன் சேர்ந்துகொண்டு ஊர்வலத்தைத் தொடங்குகிறார்கள்.

நாளை பிற்பகல் சுமார் 2 மணிக்குத் தொடங்கும் ஊர்வலம் சுமார் 2 கி.மீ. தொலைவுக்கு நடக்கிறது. ஊர்வலப்பாதை நெடுகிலும் போலீஸார் அணிவகுத்து நிற்பார்கள்.

நெய்வேலி ஆர்ச் கேட்டை அடைந்தவுடன் பொதுமக்கள், ரசிகர்கள் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள்.கலைஞர்கள் மட்டுமே உள்ளே நுழையஅனுமதிக்கப்படுவர்.

ஆர்ச் கேட்டைத் தாண்டி உள்ளே நுழையும் ஊர்வலம் நெய்வேலி லிக்னைட் கார்பரேஷன் தலைமைஅலுவலகத்தை அடையும். அங்கு போடப்பட்டுள்ள பிரமாண்ட பந்தலின் கீழ் அமர்ந்து கலைஞர்கள் ஆர்ப்பாட்டம்செய்கிறார்கள்.

பின்னர் பாரதிராஜா தலைமையில் ஒரு குழு என்.எல்.சி. தலைவர் ஜெயராமனைச் சந்தித்து மனு கொடுக்கிறது.காவிரியில் தமிழகத்திற்கு நீர் திறந்துவிடாத கர்நாடகத்திற்கு மின்சாரம் அனுப்புவதை நிறுத்த வேண்டும் என்றுஅந்த மனுவில் கோரப்பட்டிருக்கும்.

இதன் பின்னர் கலைஞர்கள் மறுபடியும் பஸ்கள் மூலம் சென்னை திரும்புகிறார்கள்.

போராட்டத்தின்போது பாதுகாப்பு பணிகளில் 5,000 போலீஸார் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இதற்காக வெளிமாவட்டங்களிலிருந்தும் 2,500 போலீஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

வடக்கு மண்டல ஐ.ஜி. ஜார்ஜ், கடலூர் மாவட்ட எஸ்.பி. ராஜீவ் குமார், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. ஆகியோர்தலைமையில் நெய்வேலியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஜெயா டி.வியில் நேரடி ஒளிபரப்பு:

இதற்கிடையே தமிழ் திரையுலகினர் நாளை நடத்தவுள்ள போராட்டத்தை ஜெயா டி.வி. நேரடியாக ஒளிபரப்புசெய்கிறது.

பேரணி, மறியல் போராட்டங்களை நேரடியாக ஒளிபரப்பும் ஜெயா டி.வி., பாரதிராஜா தலைமையிலான குழுவினர்என்.எல்.சிக்கு உள்ளே சென்று மனுவைக் கொடுத்துவிட்டு வரும் வரை காத்திருந்து, போராட்டத்தை முடிக்கும்வரை ஒளிபரப்பு செய்கிறது.

ரசிகர்கள் வர வேண்டாம்- கமல்:

இதற்கிடையே இந்தப் போராட்டத்திற்கு தன் ரசிகர்கள் யாரும் வர வேண்டாம் என்று நடிகர் கமலஹாசன்கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக கமல் ரசிகர் மன்றத் தலைவர் குணசீலன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இந்தப் போராட்டம் அரசியல் போராட்டமாக மாறும் சூழ்நிலை உருவாகியுள்ளதால் கமல் ரசிகர்கள் யாரும்நெய்வேலிக்கு வர வேண்டாம்.

மேலும் சென்னையிலிருந்து நெய்வேலிக்கு வரும் வழியிலும் யாரும் கமலுக்கு வரவேற்பு கொடுப்பதற்கும் முயலவேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X