For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நேரில் வாழ்த்திய ரஜினியின் திரையுலக குரு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ரஜினியை சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய இயக்குநர் சிகரம் பாலசந்தர் இன்று உண்ணாவிரதம் இருக்கும் அவரைநேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார்.

நண்பகல் வாக்கில் உண்ணாவிரத மேடைக்கு வந்த பாலசந்தர், ரஜினிக்குப் பொன்னாடை போர்த்திஉண்ணாவிரதம் வெற்றி பெற வாழ்த்துத் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

காவிரித் தண்ணீரைக் குடித்து வளர்ந்தவன் நான். ரஜினியின் உண்ணாவிரதம் ஒரு நல்ல விஷயம்.

இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண யாருமே இதுவரை முயலாதது வருத்தம் தருகிறது. நதிகளைஇணைப்பது ஒன்று தான் சரியான தீர்வு. இதை எம்.எஸ். உதயமூர்த்தி ரொம்ப வருடமாக கூறி வருகிறார்.

அந்தப் பூனைக்கு யார் மணி கட்டப் போகிறார்களோ தெரியவில்லை, காட் இஸ் கிரேட் என்றார் பாலசந்தர்.

அவரைத் தொடர்ந்து திரைப்படத் தயாரிப்பாளரும் பாடலாசிரியருமான பஞ்சு அருணாசலமும் நேரில் வந்துரஜினியை வாழ்த்தினார்.

நடிகை மனோரமா ரஜினிக்கு வாழ்த்துத் தெரிவிக்க வந்தபோது கூறுகையில், காவிரிக்காக யார் போராடினாலும்அவர்களுக்கு எனது ஆதரவு உண்டு. ரஜினி சாரின் உண்ணாவிரதம் நிச்சயம் வெற்றி பெறும் என்றார். அவரும்உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டுள்ளார்.

நடிகை மீனா தனது தாயார் மல்லிகாவுடன் கலந்து கொண்டுள்ளார். இயக்குநர் டி.ராஜேந்தர் வாழ்த்துதெரிவித்தார். அவரது மகன் நடிகர் சிலம்பரசன் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டுள்ளார். சிலம்பரசன்கூறுகையில், நல்ல காரியத்திற்காக சார் உண்ணாவிரதம் இருக்கிறார். இதற்கு எனது வாழ்த்துக்கள் என்றார்.

ரஜினிக்கு நடிகை லதா பொன்னாடை போர்த்தி வாழ்த்துத் தெரிவித்தார். நடிகர் பாண்டியராஜன் தனதுகுடும்பத்தினருடன் வந்து வாழ்த்துத் தெரிவித்தார். இளம் நடிகர்கள் அருண்குமார், பிரசாந்த், ஸ்ரீகாந்த்ஆகியோரும் வாழ்த்துத் தெரிவித்து உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.

நடிகர் அர்ஜூன் கூறுகையில், ரஜினி சாருக்கு எனது முழு ஆதரவும் உண்டு. இது நல்ல விஷயத்திற்காகநடத்தப்படுகிறது. இது வெற்றி பெறும் என்று முழுமையாக நம்புகிறேன் என்றார்.

நடிகர்கள் கார்த்திக், ஜெயராம், நடிகை ஜெயசித்ரா ஆகியோரும் பின்னர் வந்து ரஜினியின் உண்ணாவிரதத்தில்கலந்து கொண்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X