For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுக- ப.சி. கூட்டணியை உருவாக்க ரஜினி திட்டம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ரஜினி அரசியலுக்கு வருவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்த உண்ணாவிரதம் அவருக்கு ஒரு அரசியல் லான்ஜிங் பேட் என்று தான் சொல்லவேண்டும்.

அன்று எம்.ஜி.ஆர். மேற்கொண்ட அதே பாணியை இப்போது ரஜினி மேற்கொண்டிருப்பதும், ரஜினியின் மனஓட்டத்தை நன்கு அறிந்தவரும், அவரது நீண்ட நாள் நண்பருமான நடிகர் கமல்ஹாசனே, ரஜினி அரசியிலில்நுழைகிறார் என்று கூறியிருப்பதும் இதை உறுதிப்படுத்துகின்றன.

காவிரிப் பிரச்சினையில் கன்னட திரையுலகம் மேற்கொண்ட போராட்டம் தமிழ்த் திரையுலகினரை உசுப்பிவிட்டது. பாரதிராஜா தலைமையில் திரண்ட தமிழ்த் திரையுலகினர் நெய்வேலியில் முற்றுகைப் போராட்டம் எனமுடிவு செய்தனர்.

இந்த முடிவுக்கு தமிழக மக்கள் மத்தியில் எழுந்த மகத்தான ஆதரவைப் பார்த்த அரசியல் கட்சிகள் பாரதிராஜாவுக்குஆதரவு தெரிவித்தன.

ஆனால் இவ்விஷயத்தில் ரஜினி முரண்பட்டார். இடையில் அரசியலும் புகுந்து விளையாடியது. பாபா படரிலீசின்போது ரஜினுக்கு எதிராக ராமதாஸ் தீவிர நடவடிக்கைகளில் இறங்கியபோது நோ கமெண்ட்ஸ் சொன்னதிமுக தலைவர் கருணாநிதி திடீரென ரஜினியின் செல்வாக்கைக் குறைக்கும் முயற்சிகளுக்கு உதவ மாட்டேன் என்றுஅறிவித்தார்.

அவரது உண்ணாவிரதத்திற்கு திமுக மிகப் பெரும் ஆதரவைக் கொடுத்தது. இதன்மூலம் பாரதிராஜவை முன் நிறுத்திஅதிமுக நடத்தி வருவதாகக் கூறப்படும் அரசியல் விளையாட்டுக்கு செக் வைத்தார் கருணாநிதி.

மேலும் கடந்த சில ஆண்டுகளாகவே கடைமட்டத் தொண்டர்களிடையே உற்சாகம் குறைந்துவிட்ட திமுகவுக்குரஜினி என்ற உற்சாக டானிக் இப்போது அவசியம் தேவைப்படுகிறது. அதிமுகவுடனான தனது அரசியல் மோதலைரஜினியை முன்னிருந்தி நடத்திக் காட்டி முதல் சுற்றில் திமுக வென்றுவிட்டதாகக் கூற வேண்டும்.

ரஜினிக்கு திமுக ஆதரவு என்று சொன்னவுடன் மிக வேகமாக அவருக்கு ஆதரவு தெரிவித்தகு காங்கிரஸ். அதைத்தொடர்ந்து ரஜினியின் ஆன்மிககத்தால் கவரப்பட்ட பா.ஜ.கவும் அவருக்கு ஆதரவு தெரிவித்தது.

இதில் வெறுத்துப் போனது காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையின் ப.சிதம்பரம் தான். தன்னை அடுத்த தலைமுறைத்தலைவராக அடையாளம் காட்டி ரஜினி பின்னால் இருந்து ஓட்டு வாங்கி தருவார் என்ற நம்பிக்கையில் சொந்தக்காசைப் போட்டு கட்சி நடத்தி வருகிறார் ப.சிதம்பரம்.

அதற்காக தனது இமேஜை ரொம்பத் தூயவர் போல கட்டிக் காத்து வருகிறார். இவர் எங்கு கூட்டம் போட்டாலும்ரஜினி ரசிகர்கள் திரண்டு விடுகிறார்கள். பாபா படத்தில் வந்த கந்தன் தான் ப.சிதம்பரம் என்ற பேச்சு உள்ளது.

இந் நிலையில் உண்ணாவிரத விவகாரத்தில் திமுக தலைவர் கருணாநிதி இடையில் புகுந்து ப.சிதம்பரத்துக்குகிடைக்க இருந்த முக்கியத்துவத்தைப் பறித்துக் கொண்டுவிட்டார். இதனால் அவருக்கு கடும் ஏமாற்றம் தான்.

ரஜினியின் உண்ணாவிரதம் எதிர்பார்த்தது போலவே தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.கர்நாடகத்தில் அவரது நிலையைப் புரிந்து கொண்டு கன்னட திரை உலகத்தினர் அர்த்தமுள்ள அமைதி காத்துவருகின்றனர்.

காவிரிப் பிரச்சினையில் தன் மீது சுமத்தப்பட்ட புகார்களை அடுத்து மக்கள் மத்தியில் தனது செல்வாக்கு எப்படிஉள்ளது என்பதை பரீட்சித்துப் பார்க்கும் விதத்திலேயே அவர் உண்ணாவிரதம் இருந்தார்.

தனது உண்ணாவிரதம் மூலம் பல புதிய கேள்விகளை ரஜினி எழுப்பியுள்ளார். இந்தக் கேள்விகள் பல காலமாககேட்கப்பட்டு வருபவை தான்.

கடந்த 1972ல் திமுகவை விட்டு நீக்கப்பட்ட பின் எம்.ஜி.ஆர். இதே போலத் தான் மக்களைக் கவரும் வகையில்உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். அப்போது அவரது மேடையில் காந்தி, திருவள்ளுவர், அண்ணாபடங்கள் இடம் பெற்றிருந்தன.

அதே போலவே இப்போதும் ரஜினி உண்ணாவிரதம் இருந்தார். அவரது உண்ணாவிரத மேடையிலும் அதேபோன்ற படங்கள். ஆனால் அண்ணாவுக்குப் பதிலாக மட்டும் "பாபா" படம் இருந்தது.

ஆன்மிகத்துக்கு இடைஞ்சலாக உள்ள திராவிட இயக்கங்களுக்கு மாற்றாக ஒரு காங்கிரஸ் பின்னணி கொண்டஅணியை உருவாக்குவது தான் ரஜினியின் நோக்கம் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

ஆனால், இப்போதுள்ள நிலையில் அதிமுகவை சமாளிக்கவே அவர் திமுகவின் ஆதரவைப் பெற்றார் என்கிறார்கள்.எதிர்காலத்தில் திமுக, அதிமுக இருவருக்கும் மாற்றாக ஒரு அணியை உருவாக்குவார் என்று நம்பப்படுகிறது.

இந்த நம்பிக்கையில் தான் ப.சிதம்பரமும் கூட காத்துக் கொண்டிருக்கிறார். ஒரே நேரத்தில் திமுக, அதிமுகவைஎதிர்க்க முடியாது என்பதால் முதலில் ப.சிதம்பரம்- திமுக கூட்டணியை உருவாக்க ரஜினி முயற்சிப்பார். அடுத்ததேர்தலில் இந்தக் கூட்டணி அமைவது நிச்சயம்.

பின்னர் சிதம்பரம் தலைமையில் தனி அணி உருவாகலாம். அது திமுகவுக்கும் அதிமுகவுக்கும் மாற்றாக அமையவேண்டும் என்பது ரஜினியின் விருப்பம்.

வரும் தேர்தலில் திமுக- ரஜினி- சிதம்பரம் கூட்டணி உருவானால், ராமதாஸை தன் பக்கம் அதிமுக இழுக்கும். ஆக,தமிழக அரசியல் களத்தில் ரஜினியால் மீண்டும் பெரிய மாற்றங்கள் உருவாகப் போவது நிச்சயம்.

எப்படியோ உண்ணாவிரத "ஸ்டண்ட்" அவருக்கு அரசியல் என்ட்ரியைக் அமைத்துக் கொடுத்துவிட்டது.தெரிந்தோ, தெரியாமலோ ரஜினிக்கு புதிய பாதை ஒன்றைக் காட்டி விட்டார் பாரதிராஜா.

ஆனால், வழக்கம்போல ரஜினி மீண்டும் அமைதியாகிவிடக் கூடும் என்றும் ஒரு தரப்பினர் கருதுகின்றனர். பாட்சா100வது நாள் மேடையில் வைத்து ஜெயலலிதாவைத் தாக்கிய ரஜினியை நம்பி அதிமுகவில் இருந்து வெளியேவந்தார் ஆர்.எம்.வீரப்பன்.

அவரை ரஜினி ஆதரிப்பது மாதிரி தெரிந்தது. அதை நம்பி அவரது ரசிகர்கள் வீரப்பனுக்காக சொந்த காசைப்போட்டு போஸ்டர் அடித்து, கட்-அவுட் வைத்து, கூட்டம் போட்டு வந்தனர்.

ஆனால், அவரிடம் இருந்து சத்தமே இல்லாமல் விலகினார் ரஜினி. இதனால் இப்போது வீட்டில் ஈசி சேரில்ஓய்வெடுக்கும் அரசியல்வாதிகள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார் ஆர்.எம்.வீ. ஒரு காலத்தில் கொடி கட்டிப்பறந்த அரசியல்வாதி இவர்.

பா. சிதம்பரத்துக்கும் நிச்சயம் ஒரு ஈசி சேர் உறுதி என்கிறார்கள் ரஜினி அரசியலுக்கு வருவதை விரும்பாதவர்கள்.

ஆனால், அது ஒரு காலம், இப்போது அவர் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார் என்கிறார்கள் அவரது ரசிகர்கள்.

எல்லாம் அந்த பாபாவுக்கே வெளிச்சம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X