ஓமலூர் காய்ச்சல் பலி சம்பவம்: எலிகள் தான் காரணம் என்கிறார் அமைச்சர்
சேலம்:
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காய்ச்சல் காரணமாக 2 பெண்கள் பலியானதற்கு எலிகள் தான் காரணம் என்றும்,அது விஷக் காய்ச்சல் அல்ல சாதாரண வைரஸ் காய்ச்சல் தான் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் செம்மலைவிளக்கமளித்துள்ளார்.
செம்மலையின் சொந்தத் தொகுதியான ஓமலூர் அருகே சமீபத்தில் விஷக் காய்ச்சல் பரவி இரண்டு பெண்கள்இறந்தனர். மேலும் 25க்கும் மேற்பட்ட மக்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டனர்.
இதையடுத்து மருத்துவக் குழுக்கள் அப்பகுதிக்கு ஆய்வு செய்ய விரைந்தன. செம்மலையும் அங்கு நேரில் சென்றுபார்வையிட்டார்.
மருத்துவக் குழுவின் ஆய்வு முடிவுகளை செய்தியாளர்களிடம் செம்மலை தெரிவிக்கையில்,
இது விஷக் காய்ச்சல் அல்ல. சாதாரண வைரஸ் காய்ச்சல் தான். எலிகளிடமிருந்து இந்தக் காய்ச்சல் பரவியுள்ளது.
சாக்கடைகள், வயல் வெளிகளில் காணப்படும் எலிகளின் சிறுநீரில் வைரஸ் இருந்துள்ளது. அது குடிநீரில் கலந்துவிட்டதால் வைரஸ் காய்ச்சல் பரவியுள்ளது.
இப்போது குடிநீர் ஆதாரங்கள் அனைத்தும் மருந்து அடிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு விட்டன. எனவே மீண்டும்இந்த வைரஸ் காய்ச்சல் பரவ வாய்ப்பில்லை என்றார் செம்மலை.












Click it and Unblock the Notifications