எங்களுக்கும் சலுகைகள் தேவை: இந்து எழுச்சி மாநாட்டில் கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

மதுரை:

சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் சலுகைகள், பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த கல்விநிறுவனங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று மதுரையில் நடந்த இந்து எழுச்சி மாநாட்டில் கோரிக்கைவிடுக்கப்பட்டது.

கட்டாய மதமாற்ற தடுப்புச் சட்டத்தை ஆதரித்து மதுரையில் இந்து எழுச்சி மாநாடு நடந்தது.

இந்த மாநாட்டில் கட்டாய மதமாற்றத் தடுப்புச் சட்டத்தை ஆதரித்து விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர்கள், இந்துமுன்னணித் தலைவர்கள், பல்வேறு துறவிகள் மற்றும் மடாதிபதிகள் கலந்து கொண்டு பேசினர்.

சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் அதே சலுகைகள், பெரும்பான்மை சமூக கல்விநிறுவனங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று அப்போது கோரிக்கை விடுக்கப்பட்டது.

மத நல்லிணக்கத்தை கட்டிக் காக்க துறவிகள், மடாதிபதிகள், இந்து அமைப்பினர் ஒருங்கிணைந்து செயல்படஅழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த மாநாட்டில் விஸ்வ ஹிந்து அமைப்பின் துணைத் தலைவர் தகோடியா, இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இதற்கிடையே சென்னையில் இன்று நிருபர்களிடம் பேசிய இந்து முன்னணி அமைப்பின் முன்னாள் தலைவரானதுரை சங்கர், மதமாற்றத்தைத் தடுக்க அகில இந்திய அளவில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்றுவலியுறுத்தினார்.

தமிழக அரசு கொண்டு வந்துள்ள கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தைப் பாராட்டிய அவர் இதற்காக வரும் 23ம்தேதி சென்னையில் வாழ்த்துப் பேரணி ஒன்றை இந்து முன்னணி நடத்தவுள்ளது என்றும் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+