வீடு புகுந்து திருடிய 3 பேர் கும்பல் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வீடு புகுந்து திருடி வந்த 3 பேர் கொண்ட கும்பலை போலீஸார் கைதுசெய்தனர்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் சமீப காலமாக திருட்டுக்கள் அதிகரித்து விட்டன. இந்தக்கொள்ளையர்களைப் பிடிக்க முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர்.
இந்த நிலையில் ரமேஷ், ராஜா, முரளி ஆகிய மூன்று பேரைப் போலீஸார் சமீபத்தில் கைது செய்தனர்.
இந்தக் கும்பல் அம்பத்தூர், அண்ணாநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடு புகுந்து திருடியது விசாரணையில்தெரிய வந்தது.
இந்தக் கும்பலின் தலைவராக செயல்பட்டு வரும் லோகேஷ் என்பவனைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
கைது செய்யப்பட்டுள்ள கும்பலிடமிருந்து கார், மோட்டார் சைக்கிள் மற்றும் ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்களைபோலீஸார் கைப்பற்றினர்.












Click it and Unblock the Notifications