For Daily Alerts
Just In
தற்கொலை செய்து கொண்ட ஆசிரியர்கள் குடும்பத்துக்கு திமுக நிதியுதவி
சென்னை:
தற்கொலை செய்து கொண்ட இரு ஆசிரியர்கள் குடும்பத்திற்கு திமுக சார்பில் நிதியுதவி செய்யப்பம் என அக்கட்சிஅறிவித்துள்ளது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த பத்து நாட்களாக வேலைநிறுத்தம்செய்து வந்தனர். வெள்ளிக்கிழமை மாலையுடன் இந்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
போராட்டத்தின்போது பொள்ளாச்சியில் தலைமை ஆசிரியர் காசிப்பாண்டியன் என்பவர் தீக்குளித்துத் தற்கொலைசெய்து கொண்டார். அதேபோல, தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் ஆசிரியர் அப்துல் சத்தார் என்பவரும்தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்படுகிறது.
இந்த இருவரின் குடும்பங்களுக்கும் திமுக சார்பில் இரங்கல் தெரிவித்துள்ள அக்கட்சித் தலைவர் கருணாநிதி,இருவரது குடும்பத்துக்கும் திமுக அறக்கட்டளையிலிருந்து தலா ரூ. 50,000 நிதியுதவி வழங்குவதாகஅறிவித்துள்ளார்.


