For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆஸ்திரேலியாவில் தீபாவளி கோலாகலம்

By Staff
Google Oneindia Tamil News

சிட்னி:

ஆஸ்திரேலியாவில் உள்ள 20,000 இந்தியர்கள் அந் நாட்டு மக்களுடன் இணைந்து தீபாவளியைக் கொண்டாடினர்.

சிட்னியின் பேர்பீல்ட் ஷோ கிரவுண்டில் இந்த விழா நடந்தது. ஆஸ்திரேலியாவில் உள்ள இந்து கவுன்சிலின் சார்பில் கடந்த 4 ஆண்டுகளாகதீபாவளி மேளா என்ற பெயரில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

நேற்று இந்த அரங்கத்தில் விநாயகர், லடசுமி தேவி சிலைகளை வைத்து பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர் பரத நாட்டியம், பாங்ராநடனங்களும் நடைபெற்றன.

இதைத் தொடர்ந்து கோலாகலமான வான வேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவற்றை இந்தியர்களோடு சேர்ந்து ஆயிரக்கணக்கானஆஸ்திரேலியர்களும் கண்டு களித்தனர்.

ஆஸ்திரேலியாவுக்கான இந்தியத் தூதர் ரத்தோர், துணைத் தூதர் கணபதி மற்றும் ஸ்ட்ராட்பீல்ட் நகர மேயர், நகர நீதிபதிளும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியையொட்டி இந்திய உடைகள், இனிப்புகள், உணவுகள் விற்கும் கடைகளும் திறக்கப்பட்டிருந்தன. மேலும் யோகா, தியானம்குறித்த விளக்கங்களும் தரப்பட்டன.

இந்திய மருதாணி பூசும் கடையில் தான் விற்பனை மிகச் சுறுசுறுப்பாக நடந்தது. இந்தியப் பெண்களுக்குப் போட்டியாக ஆஸ்திரேலியப்பெண்களும் மிக ஆர்வமாக கைகளில் மருதாணி பூசிச் சென்றனர்.

நிகழ்ச்சியில் இறுதியில் மிகப் பெரிய ராவணனின் உருவப் பொம்மை எரிக்கப்பட்டது.

இந்தியர்கள் மட்டுமின்றி இந்தோனேஷியா, பிஜி, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், கென்யா, தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த இந்தியவம்சாவளியினரும் இந் நிகழ்ச்சியில் பெரும் திரளாகக் கலந்து கொண்டனர்.

தீபாவளி தினத்தை ஆஸ்திரேலிய அரசு பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும் எனவும் நிகழ்ச்சியில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X