For Daily Alerts
Just In
பாண்டிச்சேரியில் பெண் காவலர் படுகொலை
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த பெண் பட்டப் பகலில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
ஊர்க்காவல் படையைச் சேர்ந்த பெண் காவலர் மோகன வள்ளி. 41 வயதாகும் இவர் வீரம்பட்டினம் என்றபகுதியைச் சேர்ந்தவர். பணி முடிந்த பிறகு வீடு செல்வதற்காக கடலூர் சாலையில் பஸ்சுக்காக நின்றுகொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் மோகன வள்ளியை சரமாரியாக கத்தியால் குத்தினார்கள். ரத்தவெள்ளத்தில் மிதந்த மோகன வள்ளி அங்கேயே பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடைகள் அடைக்கப்பட்டன. போலீஸார் விரைந்து வந்துஉடலைக் கைப்பற்றினர்.
-->


