For Daily Alerts
Just In
வாக்காளர் பட்டியல் திருத்தம்: அரசியல் கட்சிகளுடன் சாரங்கி ஆலோசனை
சென்னை:
தமிழகத்தில் புதிய வாக்காளர்களை சேர்க்கும் பணி தொடங்கவுள்ளதையடுத்து அனைத்துக் கட்சிப்பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி மிருத்யுஞ்சய் சாரங்கி ஆலோசனை நடத்தினார்.
சாரங்கி தலைமையில் சென்னை கோட்டையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட 10கட்சிகளின் சார்பில் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
வரும் 30ம் தேதி வரை வாக்காளர் பட்டியல் திருத்தப்படும். இதற்காக ஏற்கனவே திருத்தப்பட்ட வாக்காளர்பட்டியல் சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடிகளில் வாக்காளர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
அதில் பெயர்களை சேர்த்தல், திருத்தல் உள்ளிட்டவை குறித்து மனு கொடுத்து மேற்கொள்ளலாம்.
-->


