For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

5 புதிய அமைச்சர்கள் நியமனம்: 3 பேருக்கு ஜெ. "ஆப்பு"

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழக அமைச்சரவையில் 3 பேருக்குக் கல்தா கொடுத்துள்ள முதல்வர் ஜெயலலிதா, ஏற்கனவே அமைச்சர்களாகஇருந்த 2 பேர் உள்பட புதிதாக 5 அமைச்சர்களைச் சேர்த்துள்ளார்.

கூட்டுறவு, உணவு மற்றும் சிவில் சப்ளை துறைகளைக் கவனித்து வந்த பி. தனபால், பிற்படுத்தப்பட்டோர், மிகவும்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் துறையைக் கவனித்து வந்த கே. சுதர்சனம் மற்றும் தொழிலாளர்,வேலைவாய்ப்பு பயிற்சி, நகர்ப்புற மற்றும் ஊரக வேலைவாய்ப்பு, மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் வக்ப்துறைகளைக் கவனித்து வந்த வா.து. நடராஜன் ஆகிய மூவரும் அமைச்சர் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

ஏ. அன்வர் ராஜா (ராமநாதபுரம்), ஆர். வைத்திலிங்கம் (ஒரத்தநாடு), ஆர். வடிவேல் (வாணியம்பாடி), ஏ.பாப்பாசுந்தரம் (குளித்தலை) மற்றும் பி.வி. தாமோதரன் (பொங்கலூர்) ஆகிய ஐந்து பேரும் புதியஅமைச்சர்களாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இவர்களில் அன்வர் ராஜாவும் வைத்திலிங்கமும் ஏற்கனவே அமைச்சர்களாக இருந்து நீக்கப்பட்டவர்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது.

மதுரை மாவட்டம் பேரையூரில் சிறுமிகளை மண்ணுக்குள் புதைத்து எடுக்கும் திருவிழாவில் கலந்து கொண்டதுரைராஜ் தன் அமைச்சர் பதவியை சில மாதங்களுக்கு முன் ராஜினாமா செய்தார்.

மேலும் ஊரகத் தொழில்துறை அமைச்சராக இருந்த ஆர். வில்வநாதன் சமீபத்தில் அமைச்சரவையிலிருந்துநீக்கப்பட்டார். இவர்களுடைய துறைகள் வேறு அமைச்சர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

இந்நிலையில் தான் நேற்று ஜெயலலிதா அதிரடியாக மூன்று அமைச்சர்களுக்கு கல்தா கொடுத்துவிட்டு, ஐந்துஅமைச்சர்களைச் சேர்த்துள்ளார்.

நீக்கப்பட்ட நடராஜன் கவனித்து வந்த துறைகள் அன்வர் ராஜாவுக்கு அளிக்கப்பட்டுள்ளன. தனபால் வகித்து வந்தகூட்டுறவு மற்றும் உணவுத் துறைகளை இதுவரை வனத்துறை அமைச்சராக இருந்த பி. மோகன் கவனித்துக்கொள்வார். சுதர்சனத்தின் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் துறை தற்போது பாப்பாசுந்தரத்தின் கைகளில்வந்துள்ளது.

மின்துறை அமைச்சர் நயினார் நாகேந்திரன் கூடுதலாகக் கவனித்து வந்த ஊரகத் தொழில்துறை வடிவேலுக்குவழங்கப்பட்டுள்ளது. மோகனின் வனத்துறை வைத்திலிங்கத்திடம் கை மாறியுள்ளது.

உள்ளாட்சித்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் கூடுதலாக வகித்து வந்த வீட்டு வசதி மற்றும் நகர்ப்புறமேம்பாட்டுத்துறை அனிதா ஆர். ராதாகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டுள்ளது. அனிதா கவனித்து வந்த கால்நடைபராமரிப்புத்துறை புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள தாமோதரனுக்கு வந்து சேர்ந்துள்ளது.

கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த தனபாலுக்கு அந்தப் பதவி குறித்து அவ்வளவாகத் தெரியவில்லை என்றும்சட்டசபைக் கூட்டத்தின் போது கூட எதிர்க் கட்சியினர் மடக்கி மடக்கிக் கேள்வி கேட்ட போது அவர் பதில்சொல்லத் தெரியாமல் விழித்ததாகவும் அவருக்கு ஆதரவாக பலமுறை ஜெயலலிதாவே பதில் கூறியதாகவும்இதனால் தான் அவர் நீக்கப்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

மற்ற இரு அமைச்சர்களும் ஏன் நீக்கப்பட்டார்கள் என்பது குறித்துத் தெரியவில்லை.

சமீபத்தில் தமிழக அரசு கொண்டு வந்த கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தை ஆதரித்து சமீபத்திய சட்டசபைக்கூட்டத்தில் எதிர்க் கட்சிகளுக்குக் காராசாரமாகவும், சூடாகவும் பேசியதன் விளைவு- அன்வர் ராஜாவுக்கு அடித்ததுலக்கி. கிட்டத்தட்ட ஆறு மாத இடைவெளிக்குப் பின்னர் அமைச்சரவையில் ஐக்கியமாகியுள்ளார் இவர்.

இந்தப் புதிய அமைச்சரவை மாற்றம் குறித்து நேற்று மாலை ராஜ் பவன் சென்ற ஜெயலலிதா, ஆளுநர் ராமமோகன்ராவிடம் தெரிவித்துள்ளார். முதல்வரின் பரிந்துரையின் பேரில் ஆளுநர் இந்த அமைச்சரவை மாறுதல்களைஅறிவித்தார்.

இந்த அமைச்சரவை மாற்றத்தைத் தொடர்ந்து தமிழக அமைச்சர்களின் எண்ணிக்கை 26ஆக உயர்ந்துள்ளது.

{x

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X