திருவண்ணாமலை கோவிலை தொல்பொருள் துறையிடம் ஒப்படைக்க கருணாநிதி எதிர்ப்பு
சென்னை:
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலை மத்திய தொல்பொருள் துறையிடம் ஒப்படைக்கக் கூடாதுஎன்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
திருவண்ணாமலை கோவிலைப் பராமரிப்பது யார் என்று கடந்த சில நாட்களாகக் கடும் விவாதம் நடந்துவருகிறது. அந்தக் கோவிலை மத்திய தொல்பொருள் துறை தன் வசம் எடுத்துக் கொள்ளப் போவதாகஅறிவித்ததைத் தொடர்ந்தே இந்த விவாதங்கள் தலை தூக்கின.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீஜெயேந்திர சுவாமிகள், கோவில் நிர்வாகிகள் உள்ளிட்டபலரும் தொல்பொருள் துறைக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் கருணாநிதியும் மத்திய தொல்பொருள் துறையின் நடவடிக்கைக்குக் கடும் எதிர்ப்பைத்தெரிவித்துள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திருவண்ணாமலை கோவிலை தொல்பொருள் துறையிடம் மத்திய அரசு ஒப்படைக்கக் கூடாது. அனைத்து தரப்புமக்களின் ஒட்டுமொத்த விருப்பம் தான் இது.
தொல்பொருள் துறை இதுபோன்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க கோவில்களை சரியான முறையில் பராமரிக்கவும்பாதுகாக்கவும் முடியாது என்று ஏற்கனவே நடந்த பல சம்பவங்கள் நிரூபிக்கின்றன.
கங்கை கொண்ட சோழபுரத்தில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட கோவில் கூட தொல்பொருள் துறையிடம்ஒப்படைக்கப்பட்டது. அது தற்போது மிகவும் சேதமடைந்துள்ளதால் அந்தக் கோவிலை யாரும் பயன்படுத்துவதேஇல்லை.
இதே நிலை திருவண்ணாமலை கோவிலுக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது. எனவே அந்தக் கோவிலை தொல்பொருள்வசம் ஒப்படைக்கக் கூடாது.
மத்திய அல்லது மாநில அரசு அதிகாரிகள் பொறுப்புடன் நடந்து கொண்டாலே போதும், கோவிலின் உடைமைகள்ஒழுங்காகப் பாதுகாக்கப்படும் என்று அவ்வறிக்கையில் கூறியுள்ளார் கருணாநிதி.
மத்திய அரசின் தேசிய ஜனநாயக் கூட்டணியில் திமுகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-->


